சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்
ஒன்றிய அரசாங்கம், நாட்டு மக்களை ஆட்சி செய்வதற்காக இருக்கிறதா? அல்லது ஒரு பெரும் தேர்தல் மர்மத்தை உருவாக்குவதற்காக இருக்கிறதா? வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தும் (எஸ்ஐஆர்) என்பதை “அமித் ஷா தீவிர திருத்தம்” என்று மறுபெயரிட வேண்டும்.
திமுக மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு
ஒன்றிய அரசு நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிடும் போது, நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 10.1% ஆக உள்ளது என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது 8.2% தான் ஜிடிபி வளர்ச்சி உள்ளது என பிரதமர் மோடியே ஒப்புகொண்டுள்ளார். திடீரென்று 2% ஜிடிபி குறைய என்ன காரணம்?
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா
நாங்கள் மக்களுடன் இருக்கிறோம் என்று பாஜக கூறுகிறது. மக்களுடன் இருந்தால் வாக்குச்சீட்டு மூலமாக தேர்தலை நடத்துவதில் பாஜகவிற்கு என்ன பிரச்சனை? ஏன் பாஜக பயப்படுகிறது? தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் ஆன்மா. அது வெளிப்படைத்தன்மையுடன் இல்லாவிட்டால், ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது.
ஆம் ஆத்மி எம்.பி., சந்தீப் பதக்
நம் நாட்டில் இன்றைய அரசியலில் சமமான களம் இல்லை. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு, எஸ்ஐஆர் போன்றவை ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
