states

img

ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

உள்குத்து அரசு ஒப்பந்தங்கள் யாருக்கு, நிலப்புரோக்கர் வேலையை யார் செய்வது, அதில் கமிஷனை யார் வாங்கிக் கொள்வது என்பதில் பாஜகவுக்குள் உட்கட்சி மோதல் வெடித்திருக்கிறது. கிழக்கு திரிபுரா வில் (பாஜக ஆளும் மாநிலம்) உள்ள பிரதாப்கர் பகுதியில் இவர்களுக்கிடையிலான சண்டை நடுத்தெரு வுக்கே வந்துவிட்டது. அதோடு, இரண்டு குழுக்களுமே ஆத்திரத்தில் கட்சி அலுவலகத்தை சூறையாடியி ருக்கிறார்கள். வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாக னங்கள் நொறுக்கப்பட்டன. நாற்காலிகளை உடைத்த தோடு அவர்கள் நிற்கவில்லை. பிரதமர் மோடி, நட்டா, முதலமைச்சர் உள்ளிட்டோர் இருக்கும் படங்கள் கிழிக்கப்பட்டுள்ளன. கட்சிக்காரர் ஒருவர் காயம டைந்துள்ளார். இரு குழுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மற்றொரு குழு புகார் அளித்தி ருக்கிறது. குழுக்களுக்கிடையில் நடக்கும் வெட்டு, குத்தைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிருப்தியில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பு? கர்நாடகத்தில் 600 பள்ளிகள் இழுத்து மூடப்படும் நிலைமை உருவாகியிருக்கிறது. சுயநிதியில் இந்தப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தற்போது போதிய நிதி இல்லை என்ற நிலைமை எழுந்துள்ளது. ஆசிரியர்க ளுக்குப் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. எங்களுக்குச் சேர வேண்டிய சம்பளத்தைத் தரும் வகை யில் நிதி ஒதுக்கீடு செய்யுங்கள் என்று ஆசிரியர்கள் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இந்தப் பள்ளிகள் அனைத்துமே கன்னட மொழியில் பயிற்றுவிப்பவை ஆகும். அரசு நிதியுதவி இல்லாத பள்ளிக்கூடங்களை நிதி யுதவி பெறும் பள்ளிகளாக ஆக்க வேண்டும் என்ற  கோரிக்கையும் எழுந்திருக்கிறது. 1995இல் தான் கடைசி யாக அப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மாணவர்களின் நலன்களைக் காக்க அரசு தலையிட வேண்டும் என்கிறார்கள் கல்வி ஆர்வலர்கள். அதுமட்டுமல்ல..! ஆரவல்லி மலைத்தொடரில் கனிமச் சுரங்கங்க ளுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில், அது மட்டும் பிரச்சனையல்ல என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதில் நீதிமன்றமும் கூட,  சுரங்க அனுமதியை மட்டும்தான் கருத்தில் கொண்டுள்ளது. ஆரவல்லி பாதுகாப்பு என்பது நீண்ட காலமாகவே இருந்து வரும் கோரிக்கையாகும். தேவை யற்ற பொருட்களைக் கொட்டும் பகுதியாகவும், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நடவடிக்கைகளும், காடுகள்  அழிப்பும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இது நீண்டகாலமாகவே இருக்கும் பிரச்சனைகளாகும். தற்போது எழுந்துள்ள சுரங்க அனுமதி என்பது மக்களின் போராட்டங்களுக்கு வழி வகுத்துள்ளது. ஒட்டுமொத்தத் தீர்வு என்பதே சரியாக இருக்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இடதுசாரி அமைப்புகளும், விவசாய சங்கங்களும் நிபுணர்களின் கருத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்கின்றன. அலட்சியம் முதல் ஆண்டிலேயே ஒரு மாணவர் 11 ஆண்டு களாகப் படித்துக் கொண்டிருக்கிறார். உத்தரப்பிர தேச மாநிலம், கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரியில்தான் இது நடந்துள்ளது. 2014ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட இவர், 2015ஆம் ஆண்டில் முதல் ஆண்டுத் தேர்வை எழுதியிருக்கிறார். அதில் தேர்ச்சி பெறவில்லை.  அதன்பிறகு, எந்தத் தேர்வையும் எழுதவில்லை. வகுப்புக ளுக்கும் செல்லவில்லை. ஆனால், கடந்த 11 ஆண்டுகளாக மாணவர் விடுதியில் தங்கியிருக்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் முழிக்கி றது. தேசிய மருத்துவ ஆணையத்திடம் கேட்கப் போகி றார்களாம். இது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்று இன்னும் பலரும் இருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் கூறு கிறார்கள். மருத்துவக்கல்வி குறித்த ஆட்சியாளர்களின் அலட்சியமே இந்த நிலைக்குக் காரணம் என்கிறார்கள்.