states

அணு ஆயுதங்களை காட்சி பொருளாக வைத்திருக்கவில்லையாம்!

அணு ஆயுதங்களை காட்சி பொருளாக வைத்திருக்கவில்லையாம்!

பாக். அமைச்சர் பகிரங்க மிரட்டல்

பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்திய அர சாங்கம் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. தூதரகம் மூடல்,  பாகிஸ்தானியர்களின் விசா ரத்து உள் ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்  கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியா வின் சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய் தது உலக அளவில் பேசுபொருளாக  மாறி உள்ளது. காரணம் சிந்து நதி பாகிஸ்  தானுக்கு 80% நீர் ஆதாரத்தை வழங்கு கிறது. இதனிடையே இரு நாடுகளுகளும்  தங்களது பாதுகாப்பை எல்லைப் பகுதி களில் அதிகரித்துள்ள நிலையில், போர்  பதற்றமும் நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்  சர் ஹனிப் அப்பாசி இந்தியாவுக்கு அணு  ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,”நீங்கள் (இந்  தியா) சிந்து தண்ணீரை நிறுத்தினால் போருக்குத் தயாராக இருக்க வேண்டும்.  எங்களிடம் உள்ள கோரி, ஷாஹீன் மற்றும்  கஸ்னவி போன்ற ஏவுகணைகளை உங்க ளுக்காகவே (இந்தியாவுக்காக) வைத்தி ருக்கிறோம். நாங்கள் 130 அணு ஆயு தங்களை காட்சி பொருளாக வைத்தி ருக்கவில்லை. அவை எங்கு இருக்கிற தென இந்தியாவிற்கு தெரியாது. நான்  மீண்டும் சொல்கிறேன், வெகுரக ஏவுகணைகள் அனைத்தும் உங்களை  (இந்தியா) இலக்காகக் கொண்டவை” என மிரட்டல் விடுத்துள்ளார்.