states

img

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

தெலுங்கானா மாநிலம் நாகர்னூல் மாவட் டத்தின் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாயில் கட்டப் பட்டு வரும்  சுரங்கப்பாதை சனிக் கிழமை காலை (பிப்.,22) இடிந்து விழுந்தது. இந்த சுரங்க விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 புலம்பெயர் தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர். அவர்களது நிலை என்ன ஆனது என இன்று வரை தெரியவில்லை. சுரங்கத்துக்குள் சிக்கியிருப்ப வர்களை மீட்கும் பணியில் மாநில, தேசிய மீட்பு பணியினருடன் இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய நிலவியல் ஆய்வு  நிறுவனத்தின் நிபுணர்கள் இணை ந்து ஈடுபட்டுள்ளனர். ஆனால் சுரங் கத்திற்குள் நீர்க்கசிவு அதிகமாக இருப்பதால் இடிந்து விழுந்த 14ஆவது கி.மீ., பகுதியில் கழுத்த ளவு நீர் தேங்கியுள்ளது.

இதனால் மீட்புப் பணியில் தொய்வு ஏற் பட்டுள்ளது. இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலாளர்களை மீட்க போர்க்கால நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என தெலுங்கா னா அரசுக்கு இந்திய தொழிற் சங்கங்களின் மையம் (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சிஐடியு பொ துச் செயலாளர் தபன் சென் விடுத் துள்ள அறிக்கையில்,”ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் சுரங்கப்பா தையில் சிக்கியுள்ள 8 புலம்பெயர் தொழிலாளர்களை மீட்பதற்கு தெலுங்கானா மாநில அரசு போர்க் கால அடிப்படையில் மீட்புப் பணி யை மேற்கொள்ள வேண்டும். குறிப் பாக சுரங்கத்தில் பணியிட பாது காப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யாத குற்றவியல் புறக்கணிப் புக்காக ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். சுரங்கப்பாதை பணியில் நீர், மண் மற்றும் சேறு நிரம்பும் சம்ப வங்கள் பொதுவாக நிகழ்பவை தான். அதனால் சுரங்கப்பாதை பணி யின் போது தடுப்பு நடவடிக்கை கள் முன்கூட்டியே மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் அமராபாத் மண்டலத்தின் டொமலபேட் கிரா மத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் (எஸ்எல்பிசி) பகுதியில் அமைக்கப் பட்டு வரும் சுரங்கப்பாதைக்குள் தொழிலாளர்கள் நுழைந்த 30 நிமிடங்களில் நீர், மண் மற்றும் சேறு நிரம்பியது.

இந்த விபத்தின் மூலம் சுரங்கப் பணியை மேற் கொண்ட ஒப்பந்ததாரருக்கு சரி யான சுரங்கப்பாதை பொறியியல் நிபுணத்துவம் இல்லை என்பதை யும், தெலுங்கானா அரசின் தொ டர்புடைய நீர்ப்பாசன மற்றும் பொ துப்பணித் துறையின் மேற்பார்வை இல்லை என்பதையும் காட்டு கிறது. சுரங்கத்தில் சிக்கிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை மற்றும் அவர்க ளின் குடும்பங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய ஆபத்தான பணி களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் கள் அனைவரும் மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர் தொ ழிலாளர்கள் ஆவர். அதனால் அவர்களின் பணியிட பாதுகாப்பை  உறுதி செய்வது மாநில தொழிலா ளர் துறை மற்றும் 1979ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடை யேயான புலம்பெயர் தொழிலாளர் சட்டத்தின் (ஐஎஸ்எம்டபிள்யூஏ) கீழ் உள்ள தொடர்புடைய நிய மிக்கப்பட்ட அதிகாரிகளின் பொ றுப்பாகும். மேலும் சுரங்க விபத்து சம்பவம் மாநில தொழிலாளர் துறை மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின் முழுமையான புறக்கணிப்பைக் காட்டுகிறது.  குறிப்பாக சுரங்கத்தில் சிக்கி யுள்ள தொழிலாளர்கள் ஐஎஸ்எம்ட பிள்யூஏயின் கீழ் பதிவு செய்யப் பட்டார்களா என்பதை மாநில அரசு விசாரணை செய்ய வேண்டும்.

மேலும் தொழிலாளர்களைக் கொண்டுவந்து ஒப்பந்ததாரருக்கு வழங்கிய முகவர் மற்றும் ஈடு பட்டுள்ள ஒப்பந்ததாரர் / துணை ஒப்பந்ததாரர் ஆகியோர் சட்டத் தின் விதிகளைப் பின்பற்றாத தற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும்.  தொழி லாளர் சங்க அமைச்சகம் தொடர்பு டைய தொழிலாளர்கள் ஊழியர்கள் வருமான நிதி (ஈபிஎப்) மற்றும் ஊழி யர்கள் மாநில காப்பீடு (ஈஎஸ்ஐ) யின் கீழ் உள்ளார்களா என்பதை பதிலளிக்க வேண்டும். சட்டப்பூர்வ மாக தொழிலாளிகளுக்கு நிவார ணத்தையும் உறுதி செய்ய வேண்டும்” என அதில் கூறப் பட்டுள்ளது.