வக்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று அறிமுகம்
வக்பு சட்டத் திருத்த மசோதா மக்க ளவையில் புதனன்று (ஏப்.2) அறிமுகப்படுத்தப்படும் என நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறு பான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். பாஜக அரசு பெரும்பான்மை இல்லாத போதிலும் ஆர்எஸ்எஸ் இன் நிகழ்ச்சி நிரல்களை தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றது. வக்பு திருத்தச் சட்டத்திற்கு இந்தியா கூட்டமைப்பில் உள்ள அனைத்துக் கட்சி களும் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த சட்ட திருத்த மசோதா குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வந்தன. இந்நிலையில் வக்பு சட்டத் திருத்த மசோதாவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் பாஜக அரசு சமர்ப்பித்தது. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரி சீலனைக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க் கட்சிகள் கடுமையாக போராடிய பிறகு பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் தலை மையில் ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. வக்பு சொத்துகளை ஒழுங்குபடுத்து வது, நிர்வகிப்பது ஆகியவற்றில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களை சரி செய்ய வேண்டும். அதற்காக 1995-ஆம் ஆண்டு வக்பு சட்டத்தை திருத்த வேண்டும் என பொய்ப் பிரச்சாரத்தின் மூலமாக இந்த நடவடிக்கையை பாஜக நியாயப்படுத்தி வருகின்றது.
எம்புரான் படத்துக்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு
எம்புரான் திரைப்படத்துக்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு கோடைகால விடு முறைக்குப் பின் விசாரிக்கப்படும் என்று கேரள உயர்நீதிமன்றம் அறிவித்துள் ளது. மேலும் எம்புரான் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி பிஜேஷுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் எம்பு ரான் படத்தால் எங்கேயும் வன்முறை ஏற்பட்டதா என்று பாஜக நிர்வாகிக்கு கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திரைப்படத் தணிக்கைத்துறை சான்று பெற்றிருந்தாலே அந்த படம் திரையிட தகுதி உடையதுதான் என கேரள உயர்நீதிமன்றம் திட்டவட்ட மாக தெரிவித்துள்ளது.