உத்தரப்பிரதேசத்தின் 9 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளன. முன்பு வாக்குச்சீட்டுகளில் முறைகேடுகள் நடக்கும், தற்போது அது இவிஎம் முறையில் நடக்கிறது. இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை, நாங்கள் எந்த இடைத்தேர்தலிலும் பங்குபெறப் போவதில்லை.
ஜார்க்கண்ட் தேர்தலில் அபார வெற்றி பெற்ற முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துக்கள். ஜார்க்கண்டைப் போலவே 2025இல் பீகார் சட்டமன்ற தேர்தலிலும் “இந்தியா” கூட்டணி வெல்லும். எந்த நிலையிலும் பீகாரில் இனி பாஜக கூட்டணி ஆட்சி அமையாது.
ஜார்க்கண்டில் நடந்து முடிந்த தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், “இந்தியா” கூட்டணிக்கும் இடையேயான மோதல் அல்ல. கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக தண்ணீர், காடு மற்றும் நிலத்தை காப்பாற்றும் போராட்டம் ஆகும். ஜார்க்கண்டில் பாஜகவின் சதி முடிவுக்கு வந்தது. ஜார்க்கண்ட் மக்கள் அளித்துள்ள எதிர்ப்பால், இனி பாஜக சதி செய்யவே அஞ்சும்.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பேரவைத் தேர்தல்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான தோல்வி இது.
மகாராஷ்டிரா மாநில 60 ஆண்டுகள் வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்த இடங்களில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெறும் கட்சிக்கு எதிர்க்கட்சி தலை வர் பொறுப்பு கிடைக்கும். ஆனால், தற்போது வெளி யான தேர்தல் முடிவில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள எந்த கட்சியும் 10 சதவீத இடங்கள் அதாவது 28 தொகுதிகளில் வெல்லவில்லை. இதனால், அங்கு எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் சென்னையில் கைது செய்யப் பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் ஆளுநராக ஆனந்த் போஸ் பதவியேற்று சனிக்கிழமையுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டிக்கு முன்னதாக, ஆளுநர் மாளிகையில் தனது மார்பளவு சிலையை ஆனந்த் போஸ் திறந்து வைத்ததாக புகைப்படம் வெளி யானது. விளம்பரத்துக்காக ஆளுநர் இதுபோன்ற உத்திகளை கையாள்வதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.