அமெரிக்காவின் மீட்பு நடவடிக்கை முறியடிப்பு
டெஹ்ரான் அமெரிக்காவின் போர் விமானி ஒருவரை மீட்பதற்காக அமெ ரிக்கா மேற்கொண்ட நடவ டிக்கை முற்றிலும் முறியடிக்கப்பட்டது என்று ஈரான் ராணுவம் ஞாயிறன்று தெரிவித்துள்ளது. ஈரானில் சிக்கிக் கொண்ட போர் விமானியை தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சனி யன்று கூறினார். ஆனால் இதற்கு ஈரான் மறுப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானின் மத்திய கட்டளை அமைப் பான (ராணுவம்) காதம் அல்-அன்பியா வின் செய்தித் தொடர்பாளர் இப்ரா கிம் சல்பகாரி கூறுகையில், “வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானியை மீட்பது என்ற போர்வை யில், தெற்கு இஸ்பஹானில் உள்ள ஒரு கைவிடப்பட்ட விமான நிலை யத்தில் ஏமாற்று வேலை மற்றும் தப்பிக்கும் திட்டத்துடன் திட்டமி டப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் மீட்பு நடவடிக்கை முற்றிலும் முறியட கக்கப்பட்டது” என அவர் கூறினார்.
