states

img

அவசரகால அதிகாரங்களை செயல்படுத்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

அவசரகால அதிகாரங்களை செயல்படுத்த மாநிலங்களுக்கு  ஒன்றிய அரசு உத்தரவு

இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களை செய ல்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  இந்தியா -- பாகிஸ்தான் இடையே எல்லையில் கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் எல்லை ஒட்டி உள்ள மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு அமலாக்கப்பட்டுள்ளது.  எத்தகைய மோசமான நிலையை யும் சமாளிக்கும் வகையில் முப்படை களும் தயார் நிலையில் இருக்க அறி வுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில் தேவையான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறை யாகவும் திறம்படவும் செயல்படுத்து வதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ், அவசரகால அதிகாரங்களை செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்படு கிறது.  போர்க்காலத்தில் மேற்கொள்ளப் படும் கொள்முதலுக்கான விதிகளை செயல்படுத்தவும் பொது மக்களை பாதுகாக்கும் வகையில், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும் அக்கடிதத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மேலும் எந்த மாநிலமும் யூனியன் பிரதேசமும் கொள்முதல் நட வடிக்கைகளை மேற்கொள்ள எந்த  ஒரு முன் அனுமதியும் பெற வேண்டிய அவசியம் இல்லை எனவும் மருந்துகள், உணவு தானியங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசிய கொள்முதல்களும் இதில் அடங்கும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இதே போல அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைப்பதை தடுக்க வேண்டும். இல்லையென்றால் அது  அத்தியாவசியப் பொருட்களை அதிக  விலைக்கு விற்பனை செய்ய வழி வகுக்கும். அதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் உள்துறை அமைச்சகம் உத்தர விட்டுள்ளது.