டிரம்ப் விதித்த கூடுதல் வரி அமல் குழப்பம், நிச்சயமற்றதாக உள்ளது ஏற்றுமதியாளர்கள் கவலை
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி 21 அன்று உலக நாடுகளின் மீது மீண்டும் 10 சதவிகித இறக்குமதி வரி விதிப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரத்திலேயே வரி யின் அளவை 15 சதவிகிதமாக டிரம்ப் உயர்த்தினார். ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்ப டாததால் வர்த்தகர்கள் ஏற்றுமதியா ளர்கள் இடையே பெரும் குழப்பம் உரு வாகியுள்ளது. உலக நாடுகளின் மீது அதிக வரி களை விதித்து டிரம்ப் வர்க்கப்போரை நடத்தினார். இந்த வரிகள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லா மல் தன்னிச்சையாக விதிப்பது எனக் கூறி அந்நாட்டு நீதிமன்றம் அந்த அதீத வரி விதிப்புகளை ரத்து செய்தது. இதன் பிறகு அமெரிக்க சட்டப் ‘பிரிவு 122’ என்ற கூட்டாட்சி சட்டத்தைப் பயன்படுத்தி, 150 நாட்களுக்கு 10 சத விகித வரியை விதித்தார் டிரம்ப். உடனே அதை 15 சதவிகிதமாக உயர்த்தி னார்.இந்த வரி செவ்வாய்க்கிழமை (பிப்.24) முதல் 150 நாட்களுக்கு அமலாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. “தற்போதைய உத்தரவின்படி, பிப்ரவரி 24 முதல் இந்தியப் பொருட்க ளுக்கு 10 சதவிகித வரி விதிக்கப்படும். ஆனால், 15 சதவிகித வரிக்கான அமெரிக்காவின் புதிய நிர்வாக உத்தரவு இன்னும் பிறப்பிக்கப்படாததால் மிகுந்த குழப்பமாகவும் பதற்றமாகவும் உள்ளது. அதே சமயம் ஏற்றுமதி உள்ளிட்ட வர்த்தகத்தில் ஒருவித நிச்சய மற்ற நிலையும் நிலவுகிறது” எனவும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO) இயக்குநர் ஜெனரல் அஜய் சகாய் தெரிவித்துள்ளார். “வரிகள் குறித்த தெளிவும் உறுதியும் இருந்தால் மட்டுமே எங்க ளால் அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்,” என்று மும்பை யைச் சேர்ந்த ஏற்றுமதியாளரான சரத் குமார் சராப் கூறியுள்ளார். மேலும் இதுவரை இந்தியா நடத்திய பேச்சுவார்த்தையில் இந்தியர்களுக்குக் கிடைத்த லாபம் என்ன? பல முறை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் மீண்டும் மீண்டும் வரிகள் விதிக்கப்படுகின்றன. இந்த 150 நாட்களுக்குப் பிறகு என்ன நடக்கும்? வரிகள் மீண்டும் கூடுமா? என கேள்விகள் எழுந்துள்ளன. இதனால் அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.