states

மக்களவை சபாநாயகருக்கு  எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திரிணாமுல் ஆதரவு

மக்களவை சபாநாயகருக்கு  எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திரிணாமுல் ஆதரவு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்களன்று மீண்டும் தொடங்குகிறது. இது இரண்டா வது அமர்வு ஆகும். முதல் அமர்வு பிப்., 1ஆம் தேதி தொடங்கி பிப்., 11 வரை  நடைபெற்றது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வின் முதல் நாளில் (திங்களன்று) மக்களவை சபா நாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அறிவித்துள் ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளி யிட்டுள்ள அறிக்கையில்,“மக்களவை சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வரும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கிறோம். எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் எப்போதும் இணைந்தே இருக்கும்” எனக் கூறியது.  சபாநாயகர் ஓம் பிர்லா வெளிப்ப டையாக ஒருதலைப்பட்சமாக செயல்படு வதாகக் குற்றம்சாட்டி, அவரைப் பதவி யிலிருந்து நீக்கக் கோரி 118 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளனர். இந்த நோட்டீஸில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கையெழுத்திடாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.