“நோ, நோ”
மும்பை மாநகராட்சித் தேர்தலில் தங்கள் வேட்பு மனுக் களை ஏற்க மறுத்துவிட்டார்கள் என்று எட்டு பேர் புகார் செய்திருக்கிறார்கள். வேட்பு மனுவைத் தரச் சென்றபோது “நோ, நோ கிளம்புங்க” என்று விரட்டி யிருக்கிறார்கள். வார்டு எண்கள் 225, 226, 227 ஆகிய வற்றில்தான் இந்தப் பிரச்சனை. இவை அனைத்தும் சட்ட மன்ற சபாநாயகர் நர்வேகரின் கொலாபா தொகுதி யில் உள்ளன. அவரது சகோதரரின் மனைவி, சகோதரர், ஒன்று விட்ட சகோதரர் ஆகியோரே பாஜக வேட்பா ளர்கள். வேட்பாளர்களின் எண்ணிக்கையைத் தாங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். எதிர்க்கட்சி களில் கூட யார் நிற்க வேண்டும் என்று சொன்னதாகத் தகவல். மாநிலம் முழுவதும் பல வார்டுகளில் இது நடந்தி ருக்கிறது. ஏற்கெனவே 68 மாநகராட்சி வார்டுகளில் போட்டி யின்றி ஆளும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றி ருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
“பை, பை”
குஜராத்தில் பாஜகவில் இருந்து முக்கியத் தலை வர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் பெரும் அளவில் அதிருப்தியை மாநில அரசு சம்பாதித்திருக்கிறது. கடந்த தேர்தலில் கூட, காங்கிரசும், ஆம் ஆத்மிக் கட்சியும் கூட்டாகத் தேர்த லைச் சந்தித்திருந்தால், பெரும்பான்மை கிடைத்திருக் காது என்று பாஜகவினரே சொல்கிறார்கள். இந்நிலை யில், அவரவர் பகுதிகளில் சொந்த செல்வாக்கைக் கொண்டுள்ள பாஜகவினர் தெறித்து ஓடுகிறார்கள். பழங்குடி மக்கள் மத்தியில் இயங்கி வரும் மகேஷ் வாசவா, தனித்து நின்று சட்டமன்ற உறுப்பினரானவர். பாஜக வில் இணைந்து செயல்படத் தொடங்கினார். ஆனால், பழங்குடி மக்களுக்கு பாஜக அரசு எதுவும் செய்ய வில்லை என்பதால், கட்சியில் இருந்து விலகி காங்கிர சில் இணைந்திருக்கிறார். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகக் கள மிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
. “நறுக்”
மக்களைப் பற்றியெல்லாம் உங்களுக்கு எந்தக் கவலை யும் இல்லை என்று மத்தியப் பிரதேச மாநில அர சுக்கு, உயர்நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. மாசுபட்ட நீரைக் குடித்ததால், பலர் உயிரிழந்த விவகாரத்தில், இந்தி யாவிலேயே சுத்தமான நகரத்தின் நிலைமை இதுதானா என்று கேட்ட நீதிபதிகள், என்ன செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே சொன்னோமே... ஏன் நடக்கவில்லை என்று கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கிறார்கள். இன்னும் கழிவுநீர் கலந்த நீர்தான் குழாய்களில் வருகிறது என்று மக்கள் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டிலேயே புதிய குழாய்களுக்கான தீர்மானம் மாநக ராட்சியில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பதிக்கப்பட வில்லை. அதற்கான நிதியை அதிகாரிகள் தராததால்தான் இந்தப் பிரச்சனை என்று அரசு வழக்கறிஞர் சொன்னதை நீதிபதிகள் கண்டித்துள்ளனர். அந்த விளக்கத்தை ஏற்க மறுத்து விட்டனர்.
“லக்கி”
பல்வந்த்சிங் என்ற லக்கி, தனது காரை வேக மாகச் செலுத்தி இரு சக்கர வாகனத்தின் மீது மோதி யிருக்கிறார். இவர் பாஜகவைச் சேர்ந்த ரேணுகா சிங் என்பவரின் புதல்வன். முன்னாள் ஒன்றிய அமைச்ச ராக இருந்த ரேணுகா சிங், தற்போது சத்தீஸ்கரில் சட்ட மன்ற உறுப்பினராக இருக்கிறார். வேகமாக ஓட்டி, கூட்டத் திற்குள் விடுவது, கட்டடத்திற்குள் விடுவது, இரு சக்கர வாகனங்களை அடித்துத் தூக்குவது என்பதெல்லாம் பாஜக தலைவர்கள் குடும்பத்தினரின் வாடிக்கையான செயல்களாக மாறியுள்ளன என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த சம்பவத்தில் கூட, அடிபட்ட வரைக் கவனிக்க முன்வந்த காவலர்களின் எண்ணிக்கை யை விட, பல்வந்த்சிங்கைப் பாதுகாக்க முன்வந்த காவ லர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்கிறார்கள். உடனடியாகப் பிணையும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அடிபட்ட இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
