பாஜக ஆளும் தில்லியில் சட்டத்தின் ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது
உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
புதுதில்லி பிப்., 7ஆம் தேதி தில்லியின் திஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்ற வளா கத்தில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொ டரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சூர்யாகாந்த் தலைமையிலான அமர்வு முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் (தாக்குதலில் பாதிக் கப்பட்ட வழக்கறிஞர்) மற்றும் தில்லி அரசு என இருதரப்பு வாதங்களு க்குப் பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யாகாந்த் அமர்வு, “நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே ஒரு வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத் தப்பட்டிருப்பது, தில்லியில் சட்டத் தின் ஆட்சி தோல்வி அடைந்து விட்டது என்பதையே காட்டுகிறது. இதுபோன்ற “குண்டர் ராஜ்ஜி யத்தை” எங்களால் (உச்சநீதிமன்றம்) ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடி யாது. இது குறித்து உடனடியாக தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதி பதியிடம் புகார் அளிக்க வேண்டும். அந்தப் புகாரின் நகலைத் தனக்கு (உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி க்கு) அனுப்ப வேண்டும்” என தாக்கு தலில் பாதிக்கப்பட்ட வழக்கறி ஞருக்கு உத்தரவிட்டுள்ளது. தில்லியில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. காவல்துறை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ளது. இத்தகைய சூழலில், தில்லி யில் சட்டத்தின் ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது என உச்சநீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ள தால், பாஜகவும், ஒன்றிய ஆட்சியா ளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
