states

img

திரிபுராவில் பதற்றம் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு இந்தியாவிலேயே

திரிபுராவில் பதற்றம் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு இந்தியாவிலேயே

போதைப் பொருளால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநி லங்களில் ஒன்றாக திரிபுரா மாறிவிட்டது.  இந்நிலையில், திரிபுரா மாநிலத்தின் போதைப்பொருள் கடத்தல் மையமாக கருதப்படும் சாந்தி பாரா பகுதியில், போ தைப்பொருள் கடத்தலுக்கு எதிராகப் போரிடப் போவதாக 12 உள்ளூர் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பாக 12 அமைப்புகளுள் ஒன்றான ஐகாதன் யுவ சங்கஸ்தாவின் தலைவர் நாகதிராஜ் தத்தா செய்தி யாளர் சந்திப்பின் போது கூறுகை யில்,“மாநிலத்தின் இளம் தலைமுறை யைக் காக்க, 12 முன்னணி அமைப்புகள் ஒன்றிணைந்து, சாந்திபாராவில் போ தைப்பொருள் கடத்தலுக்கு எதிராகப் போரைத் தொடங்க முடிவு செய்துள் ளோம்” என அவர் கூறினார். போதைப்பொருள் விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல், உள்ளூர் அமைப்புகள் போர் அறிவிப்பை வெளியிட்டது திரிபுராவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.