கலைத்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்திய இடது முன்னணி அரசு ஒன்றிய அரசு அனுமதி மறுத்த 19 படங்களையும் மாநில அரசே திரையிடும்
திருவனந்தபுரம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 30 ஆவது சர்வதேச கேரள திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் 19 முக்கியத் திரைப்படங்களைத் திரையிட ஒன்றியத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்ச கம் அனுமதி மறுத்தது. இந்த நடவடிக்கை கலைச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்தன. இந்நிலை யில் கலைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு அனுமதிக்க மறுத்த அனைத்துத் திரைப்படங்களும் மாநில அர சாங்கத்தால் திரையிடப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன், கலாச்சாரத் துறை அமைச்சர் சஜி செரியன் ஆகியோர் அறிவித்துள்ளனர். பிரச்சனையின் பின்னணி வழக்கமாக சர்வதேசத் திரைப்பட விழாக்க ளில் திரையிடப்படும் படங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் தேவையில்லை. ஆனால் ஒன்றிய அரசிடமிருந்து “தணிக்கை விலக்கு” (Censor Exemption) பெற வேண்டும். இந்த முறை, பாலஸ்தீனப் படங்கள் மற்றும் சில உலகத் தரம் வாய்ந்த கிளாசிக் படங்கள் உட்பட 19 படங்களுக்கு இந்த விலக்கை அளிக்க ஒன்றிய அரசு மறுத்துவிட்டது. கேரள அரசின் பதிலடி இது குறித்து அமைச்சர் சஜி செரியன் கூறு கையில், “ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயக விரோதமானது. கேரளாவின் முற்போக்கான கலாச்சாரத்தின் மீதான தாக்கு தல் இது. அனுமதி மறுக்கப்பட்ட அனைத்துப் படங்களும் திட்டமிட்டபடி திரையிடப்படும்,” என உறுதி கூறினார். முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பதிவில், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை யானது “மாற்றுக் கருத்துக்களையும் ஆக்கப் பூர்வமான வெளிப்பாடுகளையும் ஒடுக்கும் சங் பரிவார ஆட்சிக் காலத்தின் எதேச்சதி காரப் போக்கையே காட்டுகிறது. விழிப்புணர்வு பெற்ற கேரளா இத்தகைய தணிக்கைக ளுக்குப் பணியாது,” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். முக்கியத் திரைப்படங்கள் 100 ஆண்டுகள் பழமையான சோவியத் காலத்து உலகப் புகழ்பெற்ற கிளாசிக் படமான பேட்டில்ஷிப் போதம்கின், ஒன்ஸ் அபான் எ டைம் இன் காசா, பாலஸ்தீன் 36, ஆல் தாட்ஸ் லெஃப்ட் ஆப் யு ஆகிய பாலஸ்தீன படங்கள், சாதியக் கொடுமைகளை விவரிக்கும் சந்தோஷ் மற்றும் பிளம்ஸ் என்கிற இந்திய திரைப்படங்கள் மற்றும் பீப் என்ற திரைப்படம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. பீப் திரைப்படமானது பெயருக்காக மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. திரைப்படத் துறையினரின் கண்டனம் பிரபல திரைப்பட இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “சினிமா பற்றிய அறியாமையாலேயே இந்த நடவ டிக்கை எடுக்கப்படுகிறது. ‘பீஃப்’ என்ற தலைப்பைக் கண்டாலே தடை செய்வது சினிமாவைத் துளியும் புரிந்து கொள்ளாத நிலை தான்,” என ஒன்றிய அரசைச் சாடினார். இந்தியாவில் அரசியல் காரணங்களுக் காகத் திரைப்படங்கள் முடக்கப்படுவது காலம் காலமாகவே இருந்து வருகிறது. அவசரநிலைக் காலத்தில் கிஸ்ஸா குர்ஸி க ஆந்தி படங்கள் முதல் சமீபத்தில் வெளியான உட்டா பஞ்சாப், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா என பல படங்கள் ஆளும் வர்க்கத்தின் அடக்கு முறைக்கு உள்ளாகி வருகின்றன. தற்போதைய கேரள அரசின் இந்தத் துணிச்ச லான முடிவானது கலைச் சுதந்திரம் மற்றும் மாநில உரிமைகள் குறித்த விவாதத்தை நாடு முழுவதும் கிளப்பியுள்ளது.
