மேற்கு வங்கத்தை பாதுகாக்க இடதுசாரிகளின் மாற்றுப் பாதை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேற்கு வங்கத்தின் வடக்கு முனையான துபான்கஞ்சில் நவம்பர் 29 அன்று தொடங்கிய “பங்களா பச்சாவ் யாத்திரை (மேற்கு வங்கத்தை பாது காப்போம்)” 19 விடியல்களைக் கடந்து, 11 மாவட்டங்களைத் தழுவி, டிசம்பர் 17 அன்று பெல்காரியாவின் பி.டி சாலை யில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒரு மாபெரும் மக்கள் கடலாக நிறை வடைந்தது. 1938ஆம் ஆண்டின் புகழ்பெற்ற சணல் ஆலைத் தொழிலாளர் போராட் டத்தின் சாட்சியாக விளங்கும் பெல்காரி யாவில் இந்த யாத்திரை முடிவடைந்தது ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியாகும். இது வெறும் எதிர்ப்புப் பேரணி மட்டுமல்ல; திரி ணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் பிடியில் சிக்கித் தவிக்கும் வங்கத்தை மீட்பதற்கான ஒரு மாற்று அரசியல் பிரகடனமாகும். மாற்று அரசியலுக்கான தேவை கடந்த 14 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சி, மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் வளர்ச்சி க்கு மறைமுகமாக உதவி செய்துள்ளது. ஊழல், நிர்வாகச் சீர்கேடு, குண்டாயிசம் ஆகியவற்றில் திரிணாமுல் காங்கிரஸும் பாஜகவும் நாணயத்தின் இரு பக்கங்க ளாகச் செயல்படுகின்றன. ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, மாநி லத்தில் வகுப்புவாத வெறுப்பையும் பிரிவி னையையும் உருவாக்கி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதே இந்த இரு கட்சிகளின் உத்தியாக உள்ளது. இடதுமுன்னணி ஆட்சிக் காலத்தில் விவசாய வளர்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தொழில் மயமாக்கல் முயற்சிகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தின. ஆனால், இன்றைய “லூட்டோக்ரசி (Lootocracy - கொள்ளையாட்சி)” மக்க ளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து விட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆர்எஸ்எஸ் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், மதச்சார் பற்ற, ஜனநாயக மற்றும் பன்முகத் தன்மை கொண்ட வங்கத்தை மீட்க இடது சாரிகள் முன்வைக்கும் “மாற்று” மிக அவசியமானது. மக்களின் வேதனையும் போராட்டக் களமும் யாத்திரை சென்ற பாதையெங்கும் மேற்கு வங்க மக்களின் குமுறல்கள் எதி ரொலித்தன. குறிப்பாக, ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவ மாணவியின் தாய், மீனாட்சி முகர்ஜியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “நீதி கிடைக்கும் வரை நாம் போராட வேண்டும்” என்று கூறியது நெஞ்சை உலுக்கும் தருணமாக அமைந் தது. அதேபோல், திரிணாமுல் குண்டர்க ளால் கொல்லப்பட்ட 10 வயது சிறுமி தமன்னா கதுனின் தாய் சபினா யாஸ் மின், “நாங்கள் இத்தகைய வங்கத்தை விரும்பவில்லை” என்று யாத்திரையில் முழங்கியது தற்போதைய அவல நிலை யை உலகிற்குப் பறைசாற்றியது. முக்கியக் கோரிக்கைகளும் தீர்வுகளும் இந்த யாத்திரை வெறும் கோரிக்கை களுடன் நிற்காமல், தீர்வுகளையும் முன் வைத்தது: J வடக்கு மேற்கு வங்கத்தின் தேயிலைத் தோட்டங்கள், வனக் கிராமங்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான அடித்தட்டு மக்களிட மிருந்து பெறப்பட்ட ஒரு “வரைவுத் திட்டம்” இந்த யாத்திரையில் உரு வாக்கப்பட்டது. J டொம்கல் பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உதவி மையம் திறக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் இத்தகைய மையங்களை அமைக்கவும், தொழிலாளர்களின் தரவுகளைச் சேகரிக்கவும் யாத்திரை வலியுறுத்தியது. J கிராமப்புறப் பெண்களைக் கடன் வலையில் சிக்க வைக்கும் நுண்நிதி (மைக்ரோ-பைனான்ஸ்) நிறுவனங்க ளுக்கு எதிராகப் பாண்டுவாவில் சட்ட உதவி மையம் திறக்கப்பட்டது. Jசுமார் 8,500 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்வி மற்றும் சுகாதாரத் துறையைத் தனியார்மயமாக்குவதை எதிர்த்து யாத்திரை குரல் கொடுத்தது. துருவமுனைப்பை உடைத்தல் கார்ப்பரேட் ஊடகங்கள் திட்டமிட்டு “ராமர்-மசூதி’ விவாதங்களை முன்னி றுத்தி, மக்களின் உண்மையான பிரச்ச னைகளான வேலையில்லாத் திண்டாட் டம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய வற்றை மறைக்க முயல்கின்றன. திரி ணாமுல்-பாஜக உருவாக்கியுள்ள இந்த ‘போலி இருமுனை அரசியலை’ உடைப் பதே இந்த யாத்திரையின் நோக்கம். யாத்திரையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமச்சந்திர டோம் மற்றும் சுஜன் சக்ரவர்த்தி, மீனாட்சி முகர்ஜி, மூத்த தலைவர்களுடன் ஸ்ரீஜன் பட்டாச் சார்யா, தீப்சிதா தார் போன்ற இளம் தலைவர்கள் அணிவகுத்துச் சென்ற னர். யாத்திரை டிசம்பர் 16 அன்று நியூ டவுனில் உள்ள “ஜோதிபாசு சமூக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தை” அடைந்த போது, அது ஒரு புதிய வங்கத்திற்கான சபதத்தை ஏற்கும் இடமாக மாறியது. மூத்த தலைவர்கள் பிமன் போஸ் மற்றும் ரபின் தேப் முன்னி லையில், திரிணாமுல்-பாஜக நிழல் யுத்தத்தை முறியடித்து, நல்லிணக்க வங்கத்தை உருவாக்கச் சூளுரைத்தனர். புதிய வங்கத்தை நோக்கி துபான்கஞ்ச் முதல் கமர்ஹாட்டி வரை நடந்த 19 நாள் பயணம், மக்களின் கோபத்திற்கு ஒரு புதிய மொழியை வழங்கியுள்ளது. கமர்ஹாட்டியில் மூடிக்கிடக்கும் சணல் ஆலைகளைத் திறப்பது, அசோக் நகரில் ஓஎன்ஜிசி திட்டத்தை விரிவுபடுத்துவது மற்றும் சதுப்புநில சுந்தரவனப் பகுதியை இணைக்கும் பாலங்களை உருவாக்கு வது போன்ற பொருளாதார மீட்புத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. முகமது சலீம் கூறியது போல, “மம்தா-மோடி உருவாக்கியுள்ள அந்த இரும்புத் திரையை உடைக்க வேண்டும். வெறும் ‘வேண்டாம்’ என்று சொல்வது மட்டும் போதாது; இடதுசாரிகள் முன் வைக்கும் மாற்று அரசியலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்பதை முன்னெடுக்க வேண்டும் என்பதை யாத்திரை வெளிப்படுத்தியது. இந்த யாத்திரை ஒரு முடிவல்ல, இது மேற்கு வங்கத்தின் கலாச்சார மற்றும் பொருளாதார எழுச்சிக்கான ஒரு புதிய தொடக்கமாகும். 2026இல் மேற்கு வங் கத்தின் வீதிகளில் மீண்டும் சிவப்புக்கொடி கம்பீரமாகப் பறக்கும் என்ற நம்பிக்கை யை இந்த யாத்திரை விதைத்துள்ளது. மயூக் பிஸ்வாஸ் & சுபினோய் மௌலிக்
