states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தி தலித் வாய்ஸ் ஊடகம்

ஒரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது வங்கதேசமோ அல்லது பாகிஸ்தானோ அல்ல. இந்தியாவில் தான். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் சோனு காஷ்யப் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். அவர் ஏழை ; ஒரு தொழிலாளி ; பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது கொலை “வழக்கமான ஒரு செய்தியாக” சுருக்கப்பட்டுவிட்டது.

ஊடக உண்மை சரிபார்ப்பாளர் முகமது ஜுபைர்

2025ஆம் ஆண்டில் 1,318 வெறுப்புப் பேச்சுகள் பதிவாகியுள்ளன. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 4 சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 88% சம்பவங்கள் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடந்துள்ளன. 98% வெறுப்புப் பேச்சுகள் முஸ்லிம்களை இலக்கு வைத்தும், 97% சமூக ஊடகங்களில் பகிரப்பட்டும் உள்ளன.

மூத்த பத்ரிக்கையாளர் பியூஸ் ராய்

மறுசீரமைப்பு பணிகளுக்காக இடிக்கப்பட்டு வரும் வாரணாசியின் டால்மண்டி பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் குறைந்தபட்சம் 90% முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை ஆகும். 

பேராசிரியர் சுமதி

மணிப்பூரில் கும்பல் பாலியல் செய்யப்பட்ட இளம்பெண் விடியாத விடியலுக்காகக் காத்திருப்பவரைப் போல, அவர் நீதிக்காகக் காத்திருந்தார். ஆனால் அதிகார அமைப்பு அவரை ஒவ்வொரு நாளும் காயப்படுத்தியது. இப்போது அவர் ஓய்வெடுக்கிறாள், அவரது காயங்கள் ஆறிவிட்டன என்பதால் அல்ல. இனிமேலும் நம்பிக்கையோடு இருக்க அவருக்குத் தெம்பில்லை என்பதால் சென்றுவிட்டார்.