நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. முன்ன தாக அனைத்துக் கட்சி கூட்டம் வியாழ னன்று நடைபெற்றது. ஒன்றிய அமைச் சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, ஜே.பி.நட்டா, அர்ஜூன் ராம் மேக்வால், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற தேசிய ஜன நாயக கூட்டணி கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்.பி., யான சஞ்சய் குமார் ஜா,”மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை முன்மொழியும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை அமல்படுத்துவதில் ஒன்றிய அரசு அவ சரப்படக் கூடாது. இது நல்லதல்ல. இந்த மசோதா தொடர்பாக விரிவான ஆலோச னைகள் தேவை. அதே போல விரிவான விவாதங்கள் தேவை” என அவர் கூறினார். அதாவது “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் வேண்டாம், இந்த திட்டம் எதற்கு? என்பதை வெளிப்படையாக கேள்வி எழுப்பாமல், அவசரப்படக் கூடாது என்று கூறி ஐக்கிய ஜனதாதளம் அனைத்துக் கூட்டத்தில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்திற்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரி வித்துள்ளது. “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய வரைவு விதி களுக்கும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் பிரசாத், “துணைவேந்தர் நியமனங்களில் ஒரு மாநிலத்தின் பங்கைக் கட்டுப்படுத்து வது, உயர் கல்விக்கான வரைபடத்தை உருவாக்கும் மாநில அரசின் முயற்சிக ளில் தடையாக இருக்கும்” என அவர் கூறினார்.