states

img

பீகார் அரசு தில்லியில் இருந்து இயக்கப்படுகிறது தேஜஸ்வி குற்றச்சாட்டு

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா  தளம் - பாஜக கூட்டணி ஆட்சி  நடைபெற்று வருகிறது. “பச்சோந்தி  அரசியலுக்கு” பெயர் பெற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்  வராகவும், பாஜகவைச் சேர்ந்த சாம்ராட்  சவுத்ரி மற்றும் விஜயகுமார் சின்ஹா துணை முதல்வர்களாகவும் உள்ளனர். நிதிஷ் குமார் பெயரளவில் மட்டுமே முதல்  வராக உள்ளார். துணை முதல்வராக உள்ள சாம்ராட் சவுத்ரி, விஜயகுமார் சின்ஹா ஆகியோர் முதல்வர்கள் போல செயல்பட்டு ஆட்சி அதிகாரத்தை கட்டுப்  படுத்தி வருகின்றனர். மேலும் பீகார்  மாநில நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பு கள் (அமைச்சர் பதவி) பாஜகவினரிடம் தான் உள்ளன.  இந்நிலையில், நிதிஷ் குமார் முதல்வ ராக இருந்தாலும் பீகார் அரசு தில்லி யில் இருந்து இயக்கப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில்,”பீகாரின் முதல்வர் அலுவலகம் தில்லியில் இருந்து இயக்கப்படுகிறது. முதல்வர் நிதிஷ்குமார் 4 பேரின் கட்டுப்  பாட்டில் பணியாற்றி வருகிறார். பீகார்  அரசும், ஐக்கிய ஜனதா தளமும் தற்  போது பாஜகவின் பிடியில் சிக்கி யுள்ளன. குறிப்பாக பீகார் மாநிலத்தில்  நிர்வாக அராஜகம் தலைவிரித்தாடு கிறது. ஊழல் எங்கும் தலைவிரித்தாடு கிறது. பொதுமக்கள் மற்றும் மக்கள் பிர திநிதிகள் மீது எந்த அதிகாரிக்கும் எந்த  அக்கறையும் இல்லை” என அவர் கூறி னார்.