states

img

ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

முதல்ல செய்யுங்க..

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவில் உள்ளது. இதைப் போக்குமாறு தொடர்ந்து கோரிக்கை கள் வைக்கப்பட்டன. பாஜக ஆட்சியில் இதைக் கண்டுகொள்ளவில்லை. தற்போது காங்கிரஸ் ஆட்சி யில் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வந்துள்ளது. ஆனால், 10,000 பணியிடங்களை நிரப்பப் போவதாக வந்திருக்கும் இந்த அறிவிப்புக்கு எதிர்பா ராத நபரிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்திருக்கிறது. அதிகமான இடங்களை நிரப்புங்கள். இல்லையென்றால், பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி, அங்குள்ள காலிப்பணியிடங்களை முதலில் நிரப்புங்கள் என்று மாநில அரசைச் சாடியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே. அப்போது மேடையில் இருந்தவர்கள் கைகளைப் பிசைந்தவாறே நின்றனர்.

இழுத்து மூடுறாங்க..

நாட்டில் உள்ள அனைத்துக் கிராமப்புறக் குடும்பங்களுக்கும் போதிய குடிநீர் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில் 2019ஆம் ஆண்டில் ஜல் ஜீவன் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. 2024க்குள் இதைச் செய்வது என்ற இலக்கு அடையப்படவில்லை. இதனால், 2028 வரையில் இதை நீட்டிப்போம் என்று சொல்லி, 2025-26க்கான நிதிநிலை அறிக்கையில் 60,000 கோடி ரூபாயை ஒதுக்கினார்கள். அந்த நிதி பெரும்பாலும் பயன் படுத்தப்படவில்லை. அதோடு, கடந்த 6 ஆண்டுகளிலும் ஏராளமான மோசடிகள் நடைபெற்றதாகக் கண்டுபிடிக் கப்பட்டன. நடவடிக்கைகள் என்ற பெயரில் பூசி மெழுகப்பட்டாலும், மோசடிகள் தொடரவே செய்தன. நடப்பாண்டு நிதியில் 60 விழுக்காடு ஒதுக்கப்படாமலேயே போகும் அபாயம் எழுந்திருக்கிறது. அதோடு, இந்தத் திட்டத்தை இழுத்து மூடிவிடுவார்கள் என்றும் சொல்லப் படுகிறது.

பொய்யிலே பிறந்து..

பொய்யான விபரங்களைக் கொடுத்து இந்தியாவிலேயே இந்தூர்தான் தூய்மையான நகரம் என்று சொன்னது அம்பலமாகிவிட்டது. புள்ளிவிபரங்களில் எந்த அளவுக்கு தகிடுதத்தம் செய்வார்கள் என்பது தொடர்ந்து  வெளிவருகிறது. மாநகரம் முழுக்க பழைய குடிநீர்க்குழாய்கள். அவற்றில் பெரும்பாலும் உடைந்து, ஆங்காங்கே கழிவு நீர் கலந்தே வந்திருக்கிறது. இதனால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதில் பலர் உயிரிழந்த தாக செய்திகள் வெளியாகின. இதிலும் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் பொய் சொல்கின்றன. நீதிமன்றத்தில் 8 பேர் உயிரிழந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். அதே வேளையில், உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக தலா  ரூ.2 லட்சத்தை 18 பேரின் குடும்பங்களுக்குக் கொடுத்துள்ள னர். ஜனவரி 12 அன்று 64 வயது பகவன்தாஸ் உயிரிழந்தி ருக்கிறார். கணக்கில் வராத மரணங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் போடலைங்க..

மகாராஷ்டிராவில், மக்களவைத் தேர்தலில் தோற்றபின், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற மகளிர் உரிமத் தொகையான ரூ. 3,000  தந்தனர். அனைத்து மகளிருக்கும் தரப்பட்ட அந்தத் திட்டத்தில் லட்சக்கணக்கான பயனாளிகளை சட்ட மன்றத் தேர்தலுக்குப் பின்னர் நீக்கி விட்டார்கள். எஞ்சிய வர்களுக்கும் தொகை சரியான நேரத்தில் வழங்குவ தில்லை. டிசம்பர் முதல் வாரத்தில் தரப்பட வேண்டியதும், ஜனவரியில் தரப்பட வேண்டியதும் இதுவரையில் கணக்கில் போடப்படவில்லை. இரண்டையும் ஜனவரி 15க்குள் தந்து விடுகிறோம் என்று உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். ஆனாலும், இதுவரையில் கணக்கில் பணம் வரவில்லை. தேர்தலுக்குப் பிறகே, இந்தப் பணம் போடப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. பணத்தைப் போடுவதற்கு அவசர, அவசரமாக வேலைகள் நடப்ப தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.