states

img

நாடாளுமன்றத்தில் 92 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இடைநீக்கம்!

நாடாளுமன்றத்தில் மக்களவை எம்.பி-க்கள் 46 பேர் மற்றும் மாநிலங்களவை எம்.பி-க்கள் 46 என மொத்தம் 92 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவையில் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி ஏற்கெனவே கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், சுப்பராயன், பி.ஆர்.நடராஜன், எஸ்.ஆர்.பார்த்திபன், பென்னி பெஹனன், வி.கே.ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத், டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், ரம்யா ஹரிதாஸ், ஹைபி ஈடன்  ஆகிய 13 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், சுமதி, தமிழச்சி தங்கபாண்டியன், விஜய் வசந்த், திருநாவுக்கரசர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய் உள்ளிட்ட 33 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், இது தொடர்பாக மாநிலங்களவையில் ஏற்கனவே டெரிக் ஒ பிரையன் எம்.பி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்திய 45 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவை எம்.பி-க்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், வி.சிவதாசன், ஜான் பிரிட்டாஸ், ஏ.ஏ.ரஹீம், மனோஜ் குமார் ஜ்ஹ உள்ளிட்ட 45 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.