states

img

மும்பை ரயில் குண்டு வெடிப்பு உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்

மும்பை ரயில் குண்டு வெடிப்பு உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்

புதுதில்லி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகர் ரயில்க ளில் 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அடுத்த டுத்து வெடிகுண்டுகள் வெடித் தன. இந்த சம்பவத்தில் 189 பேர் உயிரிழந்தனர். குண்டு வெடி ப்புச் சம்பவத்திற்கு “லஷ்கர் இ குவாகர்” அமைப்பு பொறுப் பேற்றது. மேலும் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.  2015ஆம் ஆண்டு இந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரும் குற்றவாளிகள் என்றும், அதில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை யும், எஞ்சிய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மும்பை  சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ஜூலை 21ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, 11 பேரை (12 பேரில் ஒருவர் உயிரிழந்து விட்டார்) விடுதலை செய்தது.  இந்த உத்தரவை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு வை தாக்கல் செய்தது. இந்த  மனு வியாழனன்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் எம்.என்.சுந்த ரேஷ், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. முதலில் மகாரா ஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த தீர்ப்புக்கு இடைக் கால தடை கோரினார். இருதரப்பு வாதத்திற்கு பின் உச்சநீதிமன்ற நீதிபதிகள்,”இந்த வழக்கில் அனைவரும் விடுதலை செய் யப்பட்டு விட்டதால் மீண்டும் அவர் களை சிறையில் அனுப்புவதற் கான கேள்வி எழவில்லை. எனினும் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கிறோம். ஆனால் விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் சிறைக்குத் திரும்பத் தேவையில்லை” என உத்தர விட்டனர்.