states

img

அசாம் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஎம் தொடர்ந்த வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

அசாம் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  சிபிஎம் தொடர்ந்த வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுதில்லி பாஜக ஆளும் அசாமில் முதலமைச்சராக இருப்பவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. அசாமில் விரைவில்  சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கடந்த 5 மாத காலமாக இந்து - முஸ்லிம் மக்களி டையே மோதலை தூண்டும் வகை யில் அவர் பேசி வருகிறார். குறிப்பாக முஸ்லிம் மக்களை துப்பாக்கியால் சுடும் வீடியோக்க ளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும், எதிர்க்கட்சித் தலை வர்களை பாகிஸ்தான் உளவாளி கள் என்று அடாவடியாக பேசியும் வருகிறார். இந்நிலையில், அசாம் முதல மைச்சர் மீது சட்டரீதியாக நடவ டிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அசாமிய அறிஞர் டாக்டர் ஹிரேன்  கோஹைன் தரப்பில்  உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு திங்க ளன்று தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபூல் பஞ்சோலி ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களின் தரப்பில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, சி.யு. சிங் ஆகியோர், முதலமைச்சர் பதவி வகிக்கும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இலக்கு வைப்பதும், வன்முறையைத் தூண்டுவதும் அரசியலமைப்புக்கு எதிரானது. ஹிமந்தா பிஸ்வா சர்மா அசா மில் மட்டுமின்றி சத்தீஸ்கர், ஜார்க் கண்ட் போன்ற பிற மாநிலங்களி லும் வெறுப்புப் பேச்சுகளைப் பேசியுள்ளார். ஹிமந்தா பிஸ்வா அசாமின் தலைவராக (முத லமைச்சர்) உள்ளார். முழு அதிகா ரம் பெற்றவர். அவருக்கு எதிராக அசாம் மாநிலத்திலேயே விசா ரணை நடத்தக் கோருவது கடினம். அதனால் வழக்கை வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என வாதத்தின் போது கோரிக்கை விடுத்தனர். மறுப்பு வாதங்களுக்கு பின்பு தலைமை  நீதிபதி சூர்யா காந்த் தலைமையி லான அமர்வு,“எல்லா விவகாரங்க ளையும் நேரடியாக உச்சநீதிமன் றத்திற்குக் கொண்டு வருவது உயர்நீதிமன்றங்களின் அதிகா ரத்தைக் குறைத்து மதிப்பிடுவது போலாகும். அதாவது உச்சநீதி மன்றத்திற்கு நேரடியாக விசா ரிக்கும் அதிகாரம் இருந்தபோதி லும், உயர்நீதிமன்றத்தை அணு காமல் நேரடியாக இங்கு வரும் “குறுக்கு வழிகளை” ஊக்குவிக்க விரும்பவில்லை. உச்சநீதிமன்றம் செய்யக்கூடிய அனைத்தையும் உயர்நீதிமன்றங்களாலும் செய்ய முடியும். நாட்டின் நீதித்துறை அமைப்பின் மீது நம்பிக்கை வைக்குமாறு மனுதாரர்களை கேட்டுக்கொள்கிறேன். மனுதா ரர்கள் கவுகாத்தி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தால், அதனை விரைவாகப் பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்று அந்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம்  சார்பில் அறிவுறுத்துகிறோம்” என கூறியுள்ளது. சர்ச்சை தேர்தல் நெருங்கும் வேளை யில், எந்தவொரு அரசியல் தலைவ ரோ அல்லது அரசியலமைப்புப் பதவி வகிப்பவரோ நாட்டின்  மதச்சார்பற்ற கொள்கைகளுக் கும், அரசியலமைப்பு அறநெறி களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என்ற மனுதாரர்களின் கருத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.  ஆனாலும் நேரடியாக உச்சநீதி மன்றத்தில் முறையிடுவதைத் தவிர்த்து, உயர்நீதிமன்றத்தை நாடு மாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.