states

img

உ.பி பாஜக அரசின் புல்டோசர் அரசியலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

உ.பி பாஜக அரசின் புல்டோசர் அரசியலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

இடிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.10 லட்சம் நட்ட ஈடு வழங்க அதிரடி உத்தரவு

உத்தரப்பிரதேச மாநிலம் பிர யாக்ராஜில் புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளும்  பாஜக அரசின் செயல், மனிதாபிமான மற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள் ளது.  இந்த புல்டோசர் நடவடிக்கைக ளுக்கு உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. தற்போது உ.பி. அரசால் இடித்து தள்ளப்பட்ட வீடுகளுக்கு 6 வாரங்க ளுக்குள் தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு  வழங்கவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உ.பி. மாநிலத்தில் புல்டோசர்கள் மூலம் வீடுகள், கட்டடங்கள் இடிக்கப்படு வதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் செவ்வாயன்று விசாரித்தது.

 பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் வீடுகளை புல்டோசர்கள் மூலம் இடிப்பது  மனிதாபிமானமற்றது சட்டவிரோத மானது. பொறுப்பே இல்லாமல் நடக்கும் ஆட்சியின் கீழ் இப்படி இடிக்கப் பட்டுள்ளன என இந்த விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில் பொதுமக்களின் வீடுகளை இடித்து தள்ளு வதை  ஏற்க முடியாது. இத்தகைய செயல்பாடுகள் கடுமையான அதிர்ச்சி யை ஏற்படுத்துகின்றன. புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளப்பட்ட வீடுகளுக்கு 6 வாரங்களுக்குள் தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என இந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  முன்னதாக அலகாபாத் உயர்நீதி மன்றமானது, புல்டோசர் மூலம் வீடு களை இடிப்பதற்கு எதிரான வழக்கு களை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.