states

img

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க தில்லியில் சிறப்புப் பொதுக் கூட்டம்

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க தில்லியில் சிறப்புப் பொதுக் கூட்டம்

தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

புதுதில்லி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு  அந்தஸ்தை நீக்கி, அதை  இரண்டு யூனியன் பிரதேசங் களாகப் பிரித்து 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதற்கு கண்டனம் தெரிவிக்கவும், மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வலி யுறுத்தியும் “ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகள் மன்றம்” சார்பில் தில்லியில் சிறப்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த  தலைவருமான பரூக் அப்துல்லா,  ஜம்மு-காஷ்மீர் துணை முத லமைச்சர் சுஷில் குமார் சவுத்ரி (தேசிய மாநாட்டுக் கட்சி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் நிலோத்பல் பாசு, மத்தியக் குழு உறுப்பினர் முகமது யூசுப்  தாரிகாமி எம்எல்ஏ (குல்காம்), சிபிஐ(எம்எல்) பொதுச் செய லாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, காங்கிரஸ் எம்.பி.க்கள் நசீர் உசேன், மணீஷ் திவாரி, ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் குமார் ஜா (எம்.பி.,), லே புத்த சங்கம் (இஸ்ஸி நாம்கியால்), கார்கில் ஜனநாயக கூட்டணி (சஜ்ஜாத் கார்கிலி) உள்ளிட்ட ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கைச் சேர்ந்த  அரசியல் அமைப்புகள், முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கர வாதத்தை காரணம் காட்டி 370 ஆவது பிரிவை ரத்து செய்ததன் பின்னணியில் உள்ள நியாயம் குறித்து கேள்விகள் எழுப்பப் பட்டன. மேலும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், தவறு கள், நிறைவேற்றப்படாத மாநில அந்தஸ்து வாக்குறுதி மற்றும் நாட்டில் வேறு எந்த மாநிலமும் இதே கதியை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டன.