“கவனமாக பேசுங்கள்”; பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருக்கு ஓவைசி எச்சரிக்கை
ஹைதராபாத் பஹல்காம் தாக்குதலுக்கு எதிர் வினையாக இந்திய அரசு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது பாகிஸ்தான் நாட்டு க்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலை வர் பிலாவல் பூட்டோ,”சிந்து நதி எங்களுடை யது. அது எங்களுடையதாகவே இருக்கும். ஆகையால், எங்கள் தண்ணீர் அதன் வழி யாகப் பாயும் அல்லது இந்தியர்களின் ரத்தம் ஓடும்” என மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில் பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி மிகக் கடுமையாய்ப் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “இதுபோன்ற குழந்தைத்தனமான பேச்சை மறந்துவிடுங்கள். அவருடைய தாத்தாவுக்கு என்ன ஆனது என்று அவருக்குத் தெரி யாது? ஆனால் அவருடைய அம்மா பயங்கர வாதிகளால் கொல்லப்பட்டார். எனவே குறைந்தபட்சம், அவர் இப்படிப் பேசக் கூடாது. நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? தன் தாயைக் கொன்றது யார் என்று அவர் நினைக்க வேண்டும். பயங்கரவாதம்தான் அவரைக் கொன்றது. அவருக்கு அது புரியவில்லை என்றால், நீங்கள் எதைச் சொல்லி அவ ருக்கு விளக்குவீர்கள்? உங்கள் தாய் சுடப் பட்டது பயங்கரவாதத்தால். நம் தாய்மார்க ளையும் மகள்களையும் கொல்லுவதும், பயங்கரவாதம் அல்லவா? ஒரு நாட்டிற்குள் நுழைந்து அப்பாவிகளைக் கொன்றால், எந்த நாடும் அமைதியாக இருக்காது. மதத்தைக் கேட்டுவிட்டு, மக்களைக் கொல்லும்போது மதத்தைப் பற்றி எப்படிப் பேசுவீர்கள்? நீங்கள் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள். நீங்கள் அரை மணி நேரம் பின்தங்கியிருக்கவில்லை, இந்தியாவைவிட அரை நூற்றாண்டு பின்தங்கியிருக்கிறீர்கள். பாகிஸ்தான் நாட்டின் மொத்த பட்ஜெட் இந்திய ராணுவ பட்ஜெட்டுக்குக்கூட சமமாக இல்லை. அமெ ரிக்கா உங்களுக்கு ஏதாவது கொடுக்கா விட்டால், நீங்கள் நாட்டை நடத்த முடி யாது” எனப் பேசியுள்ளார்.