states

img

மெகுல் சோக்சி, நீரவ் மோடி ஆவணங்களை எரிக்கவே அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து நாடகம்

மெகுல் சோக்சி, நீரவ் மோடி ஆவணங்களை எரிக்கவே அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து நாடகம்

மும்பை பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநி லம் தெற்கு மும்பையின் பல்லார்ட் பையர் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ளது கைசெர்-ஐ-இந்த் காம்ப்ளக்ஸ். இந்த காம்ப்ளக்ஸில் அமலாக்கத்துறை அலுவ லகம் செயல்பட்டு வருகிறது.  இந்த அலுவலகத்தில் ஞாயிறன்று அதி காலை 3 அளவில் திடீரென பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் பல தீயில் கருகி சேதமடைந்திருக்க வாய்ப்பு அதிகம் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.  சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை தங்கள் கூட்டணி பக்கம் வளைக்க 2022ஆம் ஆண்டு முதல் பாஜக அமலாக்கத்துறையை அடி ஆளாக பயன்படுத்தியது. அமலாக்கத் துறை மிரட்டல்களால் தற்போது ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் தற்போது பாஜகவின் நெருங்கிய கூட்டாளிகளாக ஆகிவிட்டனர். இத னால் மிரட்டலுக்கு பயன்படுத்த ஆவணங்களை எரிக்கவே இந்த தீ விபத்து நிகழ்த்தப்பட்டதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. ஆனால் மெகுல் சோக்சி, நீரவ் மோடி  வழக்கு ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெயரிட விரும்பாத அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில்,”அமலாக்கத்துறை யின் அலுவலகமானது ஐந்து மாடிக் கட்டி டத்தில் செயல்பட்டு வருகிறது. நான்காவது மாடி யில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4.21 மணியளவில் தீயின் தீவிரம் மூன்றாவது மாடிக்கு பரவியது. தீயணைப்புத் துறை மற்றும் மீட்புக் குழுவினர் பல மணி போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், சான்றுகள் தீயில் எரிந்து சாம்பலாகி இருக்க வாய்ப்புள் ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,850 கோடி கடன் பெற்று மோசடி செய்த மெகுல் சோக்சி மற்றும் நீரவ் மோடியின் வழக்கு ஆவ ணங்கள் 4ஆவது மாடியில் இருந்தன. அவை கள் வழக்கு ஆவணங்கள் எரிந்திருக்கலாம். மேலும் மகாராஷ்டிரா அரசியல் தலைவர்கள் சாக்கேன் புஜ்பல், அனில் தேஷ்முக் வழக்கு ஆவணங்களும் எரிந்து நாசமாகியுள்ளது” என கூறினர்.