states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவ லகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மொகுல் சோக்சி, நீரவ் மோடி உள்ளிட்ட வர்கள் குறித்த ஆவணங்கள் எரிந்து சாம்ப லானதாக செய்தியை வெளியாகியுள்ளது. உண்மை ஆதாரங்களை அழித்து சாம்பலாக்குவது தான் பாஜகவின் யாகம்.

ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்

இந்திய வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற மெகுல் சோக்சி, நீரவ் மோடி ஆகியோர் தொடர்பான ஆவணங்கள் எரிந்து சாம்பலானதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் வாஷிங் மெஷினுக்கு பிறகு அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற தீ விபத்தும் பேசுபொருளாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

நாட்டின் பெருமை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நீங்கள் (பிரதமர் மோடி) பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது நாட்டுக்கு மிகவும் துரதிருஷ்டமானது. அனைவரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் பிரதமர் மோடி அதில் கலந்து கொள்ளாதது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா

ஒருகாலத்தில் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒவ்வொருமுறை உரசல்வரும்போதும் நான் பரிந்துரைத்தேன். ஆனால், இப்போது பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்ல முடியும்?