states

img

சட்டபாதுகாப்பு வழங்குக ஓலா, ஸ்விக்கி, சொமேட்டோ ஊழியர்கள் வழக்கு

புதுதில்லி, டிச.13- ஓலா, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஓட்டுநர்களின் சமூக பாதுகாப்பு மற்றும் நலன்கள் குறித்து ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஓலா, ஸ்விக்கி, சொமேட்டோ, உபர் போன்ற செயலிகள் மூலம் உணவு விநி யோகம், ஓட்டுநர் வேலை, கொரியர் விநியோ கம் போன்ற பணிகளில் உள்ளவர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் நலன்கள் பெற சட்டம் தேவை என செயலி அடிப்படையி லான போக்குவரத்து தொழிலாளர்களின் இந்தியக் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கூட்டமைப்பு சார்பில் ஆஜரான வழக்கி ஞர் இந்திராஜய்சிங் “தற்போதுள்ள சட்டங்க ளின் கீழ் இவர்கள் சமூகப் பாதுகாப்பிற்கு தகுதி பெற்றவர்கள். இந்தத் தொழிலாளர்க ளை ‘ஒழுங்கமைக்கப்படாத தொழிலா ளர்கள்’ என்று பதிவு செய்யத் தவறியது அல்லது தற்போதுள்ள சட்டத்தின் கீழ் அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கத் தவறியது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21- வது பிரிவின் கீழ் அவர்களின் உரிமைகளை மீறுவதாகும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு, மகப்பேறு பலன்கள், ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உத வித்தொகை மற்றும் தடுப்பூசிகளை முன்னு ரிமை அடிப்படையில் வழங்குதல் போன்ற குறிப்பிட்ட திட்டங்களை சமூக பாதுகாப்புக் கான குறியீடு 2020-ன் கீழ்  ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும்” எனக் கோரினார். இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்ட நீதிபதி நாகேஸ்வரராவ்  தலைமை யிலான அமர்வு அடுத்தகட்ட விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.