states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிவசேனா (உத்தவ்) எம்.பி., அரவிந்த் சாவந்த்

வக்பு சட்டத்தை திருத்தும் ஒன்றிய அரசின் நோக்கம் மிக மோசமானது. இது ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல.  நாட்டில் பல்வேறு மக்கள் பிரச்சனை பல உள்ளன. ஆனால் “இந்து-முஸ்லிம்” விவகாரமே முக்கிய பிரச்சனை போன்று திட்டம் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது.

சிரோமணி அகாலி தள மூத்த தலைவர் பல்விந்தர் சிங் புந்தர்

சிரோமணி அகாலி தள கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது உண்மை தான். கட்சியின் மூத்த தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா உள்ளிட்ட சிலர் இரு முக்கிய தலைவர்களை பதவி நீக்கம் செய்ததை கடுமையாக கண்டித்தனர். இதனால் சிரோமணி அகாலி தள கட்சி உடையும் அளவிற்கு பிளவு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்

உத்தரப்பிரதேசத்தில் இளம் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டது வெட்கக்கேடானது. இந்த சம்பவத்தால் பத்திரிகையாளரின் குடும்பம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உத்தரப்பிரதேச பாஜக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம்புகிறோம்.

தில்லி எதிர்க்கட்சித் தலைவர் ராப்ரி தேவி

தில்லி மாநில பெண்களுக்கு மார்ச் 8க்குள் பெண்களின் கணக்குகளில் ரூ.2,500 டெபாசிட் செய்யப்படும் என்று  பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்தனர். பதிவு செய்யும் பணி கூட இன்னும் தொடங்கவில்லை. பிரதமர் மோடி தில்லி பெண்களிடம் வழக்கம் போல பொய்களை அள்ளி வீசி ஏமாற்றிவிட்டார்.