states

img

மகாராஷ்டிரா தேர்தல் எதிரொலி கவுரி லங்கேஷ் கொலையாளியை சேர்த்த வேகத்தில் நீக்கிய ஷிண்டே கட்சி

மும்பை பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் இந்துத்து வா கொள்கையை விமர்சித்ததற்காக பத்திரி கையாளரும், பிரபல எழுத் தாளருமான கவுரி லங்கேஷ் இந்துத்துவா குண்டர்களால் பெங்களூரில் கடந்த 2017 செப்டம்பர் 5 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் ஜாமீனில் விடுதலை செய் யப்பட்டனர். இந்நிலையில், கவுரி லங்கேஷ் கொலையாளிக ளில் ஒருவரான ஸ்ரீகாந்த் பங் கர்கர் கடந்த வெள்ளிக் கிழமை (அக். 18) ஷிண்டே தலைமையிலான சிவசேனா வில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநில அமைச்சருமான அர் ஜுன் கோட்கர் முன்னிலை யில் ஸ்ரீகாந்த் பங்கர்கர் சிவ சேனாவில் (ஷிண்டே) சேர்ந் தார். கட்சியில் இணைந்த உடன் ஜல்னா சட்டமன்ற தொகுதியின் பிரச்சாரக்குழு தலைவராக ஸ்ரீகாந்த் பங்கர் கரை நியமித்து அர்ஜுன் கோட்கர் உத்தரவிட்டார். 3 நாட்களில் நீக்கம்... இத்தகைய சூழலில் திங்களன்று ஸ்ரீகாந்த் பங்கர்கரை சிவசேனாவில் சேர்த்ததை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ரத்து செய்வதாக அறிவித் தார். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் பங்கர்கரை கட்சியில் சேர்த்ததற்கு சிவசேனா (ஷிண்டே) கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா தேர்தலை கருத்தில் கொண்டு ஏக்நாத் ஷிண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத் தின் ஜல்னா முன்னாள் நக ராட்சி கவுன்சிலரான ஸ்ரீகாந்த்  பங்கர்கர் 2001 முதல் 2006 வரை ஒருங்கிணைந்த சிவ சேனாவில் அங்கம் வகித் தார். 2011இல் சீட் தொடர் பான பிரச்சனையால் சிவ சேனாவில் இருந்து வெளி யேறி, இந்து ஜஞ்சக்ரிதி சமி தியில் சேர்ந்தார். கவுரி லங்கேஷ் கொலை தொடர் பாக ஆகஸ்ட் 2018இல் கைது செய்யப்பட்டார். 2024 செப் டம்பர் 17 அன்று கர்நாடக உயர் நீதிமன்றம் ஸ்ரீகாந்த் பங்கர்கருக்கு ஜாமீன் வழங் கியது என்பது குறிப்பிடத் தக்கது.