states

img

பாஜக ஆளும் உ.பி., ஒடிசாவில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை

பாஜக ஆளும் உ.பி., ஒடிசாவில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை

பாஜக ஆளும் மாநிலங் கள் பாலியல் கூடார மாக மாறியுள்ள சூழ லில், உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒடிசாவில் 5 வயது  சிறுமி படுகொலை ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு பெண்களு க்கு எதிரான குற்றங்கள் மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பழங்குடி பெண்கள்,  சிறுமிகள் பாலியல் வன்கொடு மையால் அதிகம் பாதிக்கப்படு வதாக செய்திகள் வெளியாகி வரு கின்றன. இந்நிலையில், ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தின் நிஷா என்ற பகுதியில் வியாழனன்று 5 வயது சிறுமி காணாமல் போனார். காவல் துறையில் புகார் அளித்த பின் 2 நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை அன்று கிராம எல்லை அருகே ரத்த வெள்ளத்தில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. காவல் துறை விசாரணையில் சிறுமி பாலி யல் வன்கொலை செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.  உத்தரப்பிரதேசத்தில்  சிறுமி கும்பல் பலாத்காரம் உத்தரப்பிரதேச மாநிலம் பாலியாவின் டோகாட்டி காவல் நிலையம் அருகே தனது மைத் துனி வீட்டிற்கு வந்த பீகாரைச் சேர்ந்த 14 வயது சிறுமி, மார்ச் 14ஆம் தேதி இரவு 10 மணி அளவில் 3 இளைஞர்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டுள்ளார். சிறுமியின் மைத்துனர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.