ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி
பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலம் வன்முறை பூமியாக மாறிவிட்டது. பாட்னா நவ்பத்பூரில் மூன்று பேரை சுட்டுக் கொன்ற குற்றவாளி மீது காவல்துறைக்கு நெருக்கமான உறவு இருக்கிறது. அதனால் தான் இன்னும் அந்த பயங்கர குற்றவாளி மீது வழக்கு பதியவில்லை. பலவீனமான முதலமைச்சர் நிதிஷ் காவல்துறையையும் பலவீனமாக்கி வருகிறார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்
பாஜக எப்போதும் வெறுப்பைப் பரப்பவே முயற்சிக்கி றது. பாஜகவினர் விவேகானந்தரை மரியாதைக்கு உரியவராக நினைத்தால், அவர் சிகாகோவில்,”நாம் ஒவ்வொரு மதத்தையும் உலகளாவிய ஏற்றுக்கொள்ளல் கொண்ட ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள்” என்று கூறினார். இதுதான் இந்தியாவின் கலாச்சாரம்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ பிரையன்
நாடாளுமன்றத்தில் இருப்பது ஏதோ ஒரு சர்க்கஸில் இருப்பது போன்று இருக்கிறது. கோபப்படுவதா, வருத்தப்படுவதா என்றே தெரியவில்லை. ரயில்வே அமைச்சர், அமைச்சகம் குறித்த ஒரு விவாதத்தில் பங்கேற்றார். ஆனால் விவாதத்தின் முடிவில் ரயில்வே பட்ஜெட்டை நிறைவேற்றுவது குறித்தே பேசுகிறார். மற்ற விஷயங்களை பற்றி பேச மறுக்கிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத்
வக்பு மசோதாவில் மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மசோதா குறித்த பாஜக அரசின் நோக்கங்கள் குறித்து நாங்கள் சந்தேகிக்கிறோம். எதிர்க்கட்சியைப் புறக்கணித்த விதம் குறித்து மக்களும் சந்தேகத்தில் இருக்கிறார்கள்.