மூத்த பத்திரிகையாளர் பியூஸ் ராய்
உமர் காலித்தின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது மட்டுமல்லாமல், அடுத்த ஒரு ஆண்டிற்கு அவர் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவும் தடை விதித்துள்ளது. மறுபுறம், குர்மீத் ராம் ரஹீம், ஆசாராம் போன்ற சாமியார்களுக்கு பரோல் காலம் முடிவடைந்தவுடன், அவர்களுக்கு மீண்டும் பரோல் வழங்குவதற்காக நீதிமன்றம் காத்திருக்கிறது.
ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பார்தி
மோகன் பகவத் நாடாளுமன்ற உறுப்பினரோ, அமைச்சரோ அல்ல. ஆனால் 150 சிஐஎஸ்எப் வீரர்கள் மோகன் பகவத் பாதுகாப்பிலும், ஆர்எஸ்எஸ் தலைமையகத்தின் பாதுகாப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. எல்லாம் மக்கள் வரிப்பணம்.
ம.பி., காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி
மத்தியப்பிரதேசத்தில் அசுத்தமான குடிநீர் விநியோகம் காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் வயிற்றுப்போக்குடன் மக்கள் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். 16 பேர் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
தெலுங்கானா எம்எல்சி கவிதா
தெலுங்கானா மாநிலத்தில் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கப் போகிறோம். ஜனநாயக ரீதியாக களத்தில் பணியாற்ற விரும்பும் மக்களுக்கு மட்டுமே இது உதவும். ஜனநாயகத்திற்கு மட்டுமே வாய்ப்பையும், பங்களிப்பையும் வழங்குவோம்.
