சிபிஎம் மூத்த தலைவர் காந்தி கங்குலி
இந்தியா மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட ஒரு பெரிய நாடு. இங்கு வாக்காளர் பட்டியலைச் சிறப்பாகத் திருத்தம் செய்வதற்கும், பிழையற்றதாகவும், துல்லியமாகவும் செய்வதற்கும் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் அவசர கதியில் மேற்கொண்டு வருகிறது.
ம.பி., காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியில் தேர்தலின் போது லட்சக்கணக்கான வாக்குகள் பாஜகவிற்கு சென்றது. ஆனால் இன்று உயிரைப் பறிப்பதன் (குடிநீர் சம்பவம்) மூலம் வாக்களித்த மக்களுக்கு பாஜக நன்றி சொல்கிறது.
ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி
பாஜக அரசாங்கத்தின் கவனம் முழுவதும் புல்டோசர்கள் மற்றும் இடிப்புகள் மீது மட்டுமே உள்ளது. சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மீது கிடையாது. குறிப்பாக பாஜக தலைவர்கள் குற்றம் இழைத்தாலும் தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை அறிந்து ஆக்ரோஷமான அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
திரிணாமுல் எம்.பி., கல்யாண் பானர்ஜி
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அடியாள் போன்ற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரால் மேற்கு வங்கத்தில் ஒரு ‘ஊடுருவல்காரரை’ கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அமித் ஷாவே ஊடுருவல்காரர்களில் ஒருவர்தான்.
