states

எஸ்பிஐ வங்கியின் கட்டண பணப்பரிவர்த்தனை முறை அமலுக்கு வந்தது

எஸ்பிஐ வங்கியின் கட்டண பணப்பரிவர்த்தனை முறை அமலுக்கு வந்தது

நாட்டின் முதன்மையான பொதுத்  துறை வங்கியான பாரத ஸ்டேட்  வங்கி (எஸ்பிஐ), தனது “ஐஎம்பிஎஸ் (IMPS - Immediate Pay ment Service)” என்ற உடனடியாகப்  பணம் அனுப்பும் மின்னணு முறை (ஆன் லைன்)  பணப்பரிவர்த்தனைக்கான சேவைக் கட்டணங்களை ஞாயிறன்று அமலுக்கு கொண்டு வந்தது.  இதுவரை யோனோ (YONO) ஆப், இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி  மூலம் மேற்கொள்ளப்படும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் முழுமையாக இலவச மாக இருந்தன. ஆனால் புதிய விதி முறைகளின்படி, ரூ. 25,000 வரை கட்டணம்  இல்லை என்றும், ரூ. 25,001 முதல் ரூ. 1 லட்சம் வரை பணம் அனுப்புவதற்கு 2 ரூபாயும், ரூ. 1,00,001 முதல் ரூ. 2 லட்சம்  வரை 6 ரூபாயும், ரூ. 2,00,001 முதல் ரூ. 5  லட்சம் வரை 10 ரூபாயும் வசூலிக்கப்பட உள்ளது.  ஆனால் வங்கியின் கிளைகளுக்குச் சென்று மேற்கொள்ளப்படும் பரிவர்த்த னைக்கு ஐஎம்பிஎஸ் கட்டணங்களில் எந்த  மாற்றமும் இல்லை; அவை பழைய நடை முறைப்படியே தொடரும். ஆன்லைன் முறைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்  பட உள்ளது. விலக்கு - விளக்கம் பாதுகாப்புப் படைச் சம்பளக் கணக்கு, ஒன்றிய அரசு சம்பளக் கணக்கு மற்றும் ரயில்வே சம்பளக் கணக்கு போன்ற குறிப்பிட்ட வகை சம்பளக் கண க்கு வைத்திருப்பவர்களுக்கு இந்தக் கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான பணப்பரிவர்த்தனைகளை (ரூ. 25,000-க்குள்) ஊக்குவிக்கவும், பெரிய அளவி லான பரிவர்த்தனைகளுக்கான செயல்  பாட்டுச் செலவுகளை ஈடுகட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எஸ்பிஐ வங்கி விளக்கம் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஷில்லாங்