states

img

இந்தியா கூட்டணியில் பிளவு இல்லை

புதுதில்லி தில்லி மாநிலத்தில் அடுத் தாண்டு (2025) சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, காங்  கிரஸ், பாஜக என மும்முனை போட்டிக்கான சூழல் உருவாகியுள்  ளது. “இந்தியா” கூட்டணியில் அங்  கம் வகிக்கும் ஆம் ஆத்மி, காங்கி ரஸ் கட்சிகள் மாநில அரசியல் சூழ லுக்கு ஏற்ப தில்லியில் போட்டியிடு கின்றன. இதனால் ஆட்சியை கைப்  பற்றும் நோக்கத்தில் 2 கட்சிகளும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வரு கின்றன.  இந்த மோதலின் வெளிப் பாடாக இரண்டு நாட்களுக்கு முன்  காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான்,”கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஜன் லோக்பால் போரா ட்டத்தின் மூலம் தில்லியில் ஆட்சி  அமைத்தது. ஆனால் ஜன் லோக்  பால் அமைக்க தவறிவிட்டது. பஞ்  சாபில் கூட ஜன் லோக்பால் அமைக்  கப்படவில்லை” என பேசினார்.  இதற்கு பதிலடி என்ற பெயரில் ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்  சய் சிங் எம்.பி.,”அஜய் மக்கான்  மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் “இந்தியா” கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் காங்கிரஸை கூட்ட ணியிலிருந்து விலக்கி வைக்கு மாறு கோருவோம்” என அவர் கூறி னார். இந்த வார்த்தை மோதலுக்கு இடையே சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் தில்லியில் ஆம் ஆத்மி  தேர்தல் தொடர்பான கூட்டத்தில் கெஜ்ரிவாலுடன் பங்கேற்றார்.  “கோடி மீடியா” புரளி உடனே பாஜகவின் கைப்  பாவைகளான “கோடி மீடியா”  ஊடகங்கள் வழக்கம் போல, “இந் தியா” கூட்டணி உடைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய கூட்டாளியான சமாஜ்வாதி ஆம் ஆத்மியுடன் இணைந்துவிட்டது. காங்கிரஸ் தனித்து விடப்பட்டது” என புரளியை கிளப்பின. இந்நிலையில்,”தேசிய மற்றும் மாநில அரசியல் நிலைமை வேறு பட்டது. தில்லி சட்டமன்ற தேர்தல் நிகழ்வுகளால் “இந்தியா” கூட்டணி யில் எவ்வித பிளவும் இல்லை” என  சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அமிக் ஜமேய் கூறி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு நாங்கள் ஆதரவு அளித்துள்ளோம். “இந்தியா” கூட்டணி தேசிய அளவிலான கூட்  டணி ஆகும். தேசிய அளவில் நாங்  கள் அனைவரும் ஒன்றாக இருக்கி றோம். ஆனால் மாநில அரசியலில் என்ன வேண்டுமென்றாலும் நடக் கும். அதற்காக “இந்தியா” கூட் டணி உடைந்துவிட்டது எனக் கூற  முடியாது” என  “கோடி மீடியா”  ஊடகங்களுக்கு பதிலடி கொடுத் துள்ளார்.