ஜெய்ப்பூர் பொதுவாக அரசு கல்வி நிறு வனங்களில் ஆண்டு க்கு ஒரு முறை பல மாற்றங்கள் செய்யப்படும். புதிய பாடத்திட்டம், புதிய நடைமுறையில் மாணவர்கள் சேர்க்கை, புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு, நூலகத்திற்கு புதிய புத்தகங்கள் வாங்குதல், புதிய விளையாட்டுக ளுடன் விழா போன்ற மாறுதல் மேற் கொள்ளப்படும். இந்த மாறுதல் அனைத்தும் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, இமாச்சல், கர்நாடகா உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே நிகழும். ஆனால் பாஜக ஆளும் மாநில அரசுகள் காவி வண்ணத்தை எந்த சுவற்றில் அடிப்பது?, எப்படி காவிக் கொள்கையை கல்விக்குள் கொண்டு செல்வது என்ற ஒற்றை குறிக்கோளு டன் மட்டுமே செயலாற்றி வருகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் வராக இருக்கும் பஜன் லால் சர்மா மாநி லத்தில் உள்ள அனைத்து அரசுக் கல்லூ ரிகளின் நுழைவு வாயில் சுவற்றில் காவி வண்ணம் பூச உத்தரவிட்டுள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் சிறந்த கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தவே காவி வண்ணம் பூசப்பட உள்ளதாக அம்மாநில அரசு சார்பில் அறிக்கையையும் வெளியி டப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஒரு மாதத்திற்குள் அரசுக் கல்லூரிகளின் சுவர்களில் காவி வண்ணம் பூசப்பட்ட புகைப்படத்தை முதல்வர் அலுவல கத்திற்கு அனுப்பவும் கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாழடைந்த கட்டிடத்திற்கு காவி ராஜஸ்தான் அரசு கல்லூரிகளின் கட்டிடங்கள் அனைத்தும் மயானச் சுவர்களை போல பாழடைந்த நிலை யில் காட்சி அளித்து வருகின்றன. கல்லூ ரிகளின் கட்டிடச் சுவர்களை சரி செய் யாமல் வெளிப்புறத்தில் உள்ள நுழைவு வாயிலில் காவி வண்ணத்தை பூச ராஜஸ்தான் பாஜக அரசு உத்தரவிட்டு இருப்பது கண்டனத்தை குவித்து வருகிறது.