states

img

பஹல்காம் பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்

பஹல்காம் பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால்  ரூ.20 லட்சம் சன்மானம்

ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீ ரின் பஹல்காம் அருகே பைசரன் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். 20க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் சம்பவம் நடந்து 20 நாட்களுக்கு மேல்  ஆகியுள்ள நிலையில், இன்னும் பயங்கர வாதிகள் யாரும் கைது செய்யப்பட வில்லை. இந்நிலையில், பஹல்காம் தாக்குத லில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம்  சன்மானம் வழங்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகள் புகைப்படங்களுடன் ஜம்மு-காஷ்மீர்  காவல்துறையினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். தகவல் அளிப்ப வர்களின் விபரம் கண்டிப்பாக ரகசிய மாக வைக்கப்படும் என சுவரொட்டியில் கூறப்பட்டுள்ளது.