states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆர்ஜேடி எம்எல்ஏ இஸ்ராயில் மன்சூரி

ஹோலி அன்று முஸ்லிம்கள் பற்றி பாஜக எம்எல்ஏ ஹரிபூஷன் தாக்கூருக்கு ஏன் இந்த கவலை? பீகாரில் இந்து முஸ்லிம்கள் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். ஆனால் ஹோலி பண்டிகை மூலம் மத வன்முறையை கிளப்ப பாஜக முயற்சிக்கிறது.

காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர்

பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செல்ல நாயாக அமலாக்கத்துறை மாறிவிட்டது. இந்த நாயை அவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஏவிவிடுவார்கள். பூபேஷ் பாகல் காங்கிரஸின் வலுவான தலைவராக இருந்து வருவதால், ஒன்றிய அரசு சோதனை நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. பாஜக, ஆர்எஸ்எஸ் கட்டமைத்த போலிக் கதைகள் தோற்கடிக்கப்படும்.

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை, அதிகாரம் மற்றும் வாக்காளர் உரிமை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வாக்காளர்களைச் சேர்ப்பது மற்றும் நீக்குவது எவ்வாறு நடைபெறுகிறது என்பதே முக்கியமான பிரச்சனையாக உள்ளது. 

ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்

தேர்தல் ஆணையத்தை பாஜக தன்னுடைய ஒரு அங்கமாக மாற்றியுள்ளது. தேர்தல் விவகாரம் மற்றும் பங்குச் சந்தையில் ரூ.94 லட்சம் கோடி நஷ்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக விவாதம் நடத்த வேண்டும்.