states

img

ஹோலி பண்டிகையன்று முஸ்லிம்கள் வெளியே வர வேண்டாமாம்

ஹோலி பண்டிகையன்று முஸ்லிம்கள் வெளியே  வர வேண்டாமாம்

பாஜக - ஜேடியு கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தின் பிஸ்பி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஹரிபூஷன் தாக்கூர். திங்கள ன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஹரி பூஷன் பேசுகையில்,”ரமலான் மாதத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஹோலி பண் டிகை வருவதால் இந்துக்களுடன் பிரச் சனை ஏற்படும். அதனால் பிரச்சனைக ளை தவிர்க்க முஸ்லிம்கள் ஹோலி பண்டிகை அன்று வீட்டிலேயே இருக்க வேண்டும். நீங்கள் நமாஸ் செய்வதற்கு ஒரு ஆண்டுக்கு 52 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. ஆனால் ஹோலி ஒரே ஒரு வெள்ளிக்கிழமைதான் வருகிறது. எனவே இந்துக்கள் தங்கள் பண்டிகை யைக் கொண்டாட அனுமதிக்க வேண் டும்.

பிறகு முஸ்லிம்கள் மீது வண்ணங் கள் பூசப்பட்டால் கோபப்படக் கூடாது. முஸ்லிம்களுக்கு இது பிரச்சனையாக இருந்தால், அன்றைய தினம் வீட்டிற்குள் ளேயே இருந்துகொள்ள வேண்டும். குறிப் பாக ஹோலி பண்டிகைக்காக முஸ் லிம்கள்தான் வண்ணப்பொடிகளை விற் பனை செய்கின்றனர். ஆனால் அந்த வண்ணப்பொடி தங்கள் துணிகளில் பட்டால் நரகத்திற்குச் செல்வதுபோல் உணர்வு ஏற்படும்” என மத வன் முறையை கிளப்பும் நோக்கத்தில் பேசிய தால் சர்ச்சை வெடித்துள்ளது.