tamilnadu

img

தமிழ்நாட்டு எம்.பி.க்களை அவமதித்த தர்மேந்திர பிரதான்

தமிழ்நாட்டு எம்.பி.க்களை அவமதித்த தர்மேந்திர பிரதான்

தமிழக அரசையும், எம்.பி.க்களை யும் அவமதித்துப் பேசிய ஒன்றிய பாஜக  அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நாடாளு மன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போராட் டம் நடத்திய நிலையில், தமிழகத்தில் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் எதிர்ப்பு

\மார்ச் 10 திங்கள் காலை தொடங் கிய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம்  கட்ட அமர்வில், திமுக எம்.பி. தமிழச்சி  தங்கப்பாண்டியன் பிரதமர் ஸ்ரீ திட்டத் தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 2 ஆயி ரம் கோடி வழங்கப்படாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஒன்றிய  கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர  பிரதான், “தமிழக அரசை பொறுத்த வரை, அவர்கள் தமிழக மாணவர்கள்  விஷயத்தில் பொறுப்பாக இல்லை; நேர் மையாக இல்லை; ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை; அவர்கள் நல்ல நாகரிகத்தை கொண்டிருக்கவில்லை. மொழியை வைத்துக்கொண்டு அவர்  கள் விளையாடுகிறார்கள். அவர்கள்  மாணவர்களுக்கு அநீதி இழைக்கிறார் கள். மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்” என்றார். மேலும், “பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமி ழக முதல்வரும் ஒப்புக்கொண்டார். ஆனால் சூப்பர் முதல்வரின் பேச்சை கேட்டு, கடைசி நேரத்தில் தமிழக முதல்  வர் இதில் கையெழுத்திடாமல் பின் வாங்கி விட்டார்” என்றும் குறிப்பிட்டார்.

கனிமொழியின் எதிர்ப்பு உரை

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக  எம்.பி. கனிமொழி கருணாநிதி, “இன்று நான் வலியோடு இருக்கிறேன். அமைச்ச ரின் பதில் வலியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு,  தமிழக எம்.பி.க்கள், தமிழக மக்கள் நாக ரிகமற்றவர்கள் என பேசி அமைச்சர் தர் மேந்திர பிரதான் எங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கிறார்” என்றார். மேலும், “நாங்கள் சமக்ர சிக்ஷ அபி யான் நிதிக்காக அமைச்சரை சந்தித் தோம். தேசிய கல்விக் கொள்கையில் எங்க ளுக்கு பிரச்சனை இருக்கிறது. மும்மொழிக்கொள்கையை தமிழக அரசால் ஏற்க  முடியாது என்று அமைச்சருக்கும் பிரதமருக் கும் தமிழக முதல்வர் கடிதம் எழுதி இருக் கிறார். தமிழக எம்.பி.க்கள் ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை” என்றும் தெரிவித்தார்.

வார்த்தைகள் வாபஸ்; நிலைப்பாடு மாறவில்லை கனிமொழியின் உரைக்குப் பதிலளித்த தர்மேந்திர பிரதான், தான் தமிழக அரசை,  எம்.பி.க்களை, மக்களை நாகரிகமற்ற வர்கள் என்று கூறியதாக கனிமொழி குறிப் பிட்டது தொடர்பாக, “நான் அவ்வாறு கூற வில்லை. எனினும், நான் எனது அந்த  வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள் கிறேன். நான் பேசியது எவரது மனதை யாவது புண்படுத்தி இருந்தால், அதற்காக நான் எனது அந்த வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்” என்றார். ஆனால், “பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக  ஒப்புக்கொண்டால் மட்டுமே, தமிழகத்திற்கு சமக்ர சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழான ரூ. 2,152 கோடி நிதியை வழங்குவோம்” என்ற  நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க வில்லை

. தமிழகத்தில் பரவலான போராட்டங்கள்

ஒன்றிய அமைச்சரின் கருத்துக்களைக் கண்டித்து, நாடாளுமன்றத்தில் தமிழக  எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். அத்து டன், தமிழகத்திலும் கோயம்புத்தூர், திருச்சி ராப்பள்ளி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு போராட்டங்கள் நடத்தப் பட்டன.

ஒன்றிய கல்வி அமைச்சருக்கு  கல்வி கற்றுத் தருவோம்! சு. வெங்கடேசன் எம்.பி. காட்டம்

தர்மேந்திர பிரதானுக்கு பதிலளிக்கும் விதமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள டுவிட்டர்  பதிவில், “தமிழக நாடாளுமன்ற உறுப்பி னர்கள் நாகரிகமும், ஜனநாயகமும் இல்லாதவர்கள். மக்களை ஏமாற்று கிறார்கள் என்கிறார் தர்மேந்திர பிரதான். தர்மேந்திர பிரதான் அவர்களே, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக உங்களின் அதி காரத்தையும், ஆணவத்தையும்  தொடர்ந்து  கேள்விக்கு உட்படுத்துவோம். ஒன்றிய கல்வி அமைச்சருக்குத் தேவைப்படும் கல்வியைக் கற்றுத்தரும் முதன்மை மாநில மாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கும்” என்று காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.