tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

துணிக்கடையில் பணப்பையை திருடியவர் கைது

சென்னை, மார்ச் 10- சென்னை தி.நகர் ரங்க நாதன் தெருவில் உள்ள ஜவுளி கடைக்கு வந்த நபரிடம் பணம் திருடியதாக பெண் கைது செய்யப்பட்டார். ஆவடி பருத்திப்பட்டு அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோ.ராமு (33). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தாடை வாங்கு வதற்காக தியாகராயநகர் ரங்கநாதன் தெரு வில் உள்ள ஒரு ஜவுளி கடைக்குச் சென்றார். அங்கு அவர் ஆடைகள் வாங்கிக் கொண்டிருந்த போது, அவரது பணப்பை திருடப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராமு, இதுகுறித்து மாம்பலம் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படை யில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த திருட்டில் ஈடு பட்டது திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சாந்தி (எ) தில்சாத் (54) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர்  சாந்தியை கைது செய்தனர். விசா ரணையில் சாந்தி மீது ஏற்கெனவே 21க்கும் மேற்பட்ட வழக்கு கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய  ஆண் சடலம்

சென்னை, மார்ச் 10- போரூர் ஏரியில் மீன வர்கள் விசை படகு களில் சென்று மீன் பிடிப்பது வழக்கம், அப்படி மீன் பிடிக்கும்  போது மீனுக்கு விரித்த வலையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதை பார்த்து மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போரூர் காவல் நிலையத்திற்கு மீனவர்கள் தகவல் தெரிவித்த னர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீனவர்கள் மூலம் அந்த உடலை கரைக்கு கொண்டு வந்தனர். சடலமாக மீட்கப்பட்டவருக்கு சுமார் 40 வயது இருக்கும்.இது கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10.5 கிலோ  கஞ்சா பறிமுதல்  4 பேர் கைது  

கடலூர், மார்ச்.10- குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சி பேட்டை பாலம் அருகே காரில் கடத்திச் சென்ற 10.5 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்யது, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.  போலீசார் மீனாட்சி பேட்டை பாலம் அருகில் வாகன தணிக்கையில் இருந்தபோது.  அங்க வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 10 கிலோ 500 கிராம் கஞ்சா போதை பொருட்கள் இருந்தது. கஞ்சா பொருட்களை கடத்தி வந்த குறிஞ்சிப்பாடிச் சேர்ந்த நவீன் (வயது 27), அய்யப்பன் (வயது 26), ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்ததீபா சுனா (வயது 30), நவின் பத்ரு (வயது 24)  குறிஞ்சிப்பாடி ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.