கே.ஜி.டெனிம் நிறுவனத்தின் சட்டவிரோத ஆலை மூடல்
ஆயிரக்கணக்கான தொழிலா ளர்களின் வயிற்றில் அடிக்கும் வித மாக சட்டவிரோதமாக ஆலையை மூடிய கே.ஜி.டெனிம் நிறுவனத் தின் நடவடிக்கைக்கு சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம், காரமடை யில் கே.ஜி.டெனிம் நிறுவனம் செயல்படுகிறது. ஜீன்ஸ், போர்வை உள்ளிட்ட பல்வேறு ஜவுளி உற் பத்தியில் இந்நிறுவனம் ஈடுபட்டி ருந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி யாற்றி வந்தனர். இந்நிலையில், தொழிலாளர்களுக்கு எவ்விதமான தகவலையும் தெரிவிக்காமல், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திடீரென ஆலையை நிர்வாகம் சட்ட விரோதமாக மூடியுள்ளது. இந்நிறு வனத்தை நம்பியுள்ள தொழிலா ளர்கள் தற்போது வாழ்வாதா ரத்தை இழந்து தவித்து வருகின்ற னர். ஆலை மூடியுள்ள இந்த நான்கு மாத காலத்திற்கு தொழிலாளர் களுக்கு எவ்வித ஊதியமும் வழங் கப்படாததால் பெரும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். இதனையடுத்து, கே.ஜி.டெனிம் நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கையை எதிர்கொள்ள இத்தொழிலாளர்கள் சிஐடியுவை நாடினர். இதனைத்தொடர்ந்து, கார மடை கே.ஜி.டெனிம் தொழிலாளர் கள் சிறப்புப் பேரவை கூட்டம் மேட் டுப்பாளையத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில், ஆலையை உடனடியாக திறக்க வேண்டும். வேலை செய்த காலத்திற்கு ஊதி யம் வழங்கப்பட வேண்டும். ஆலை மூடிய நான்கு மாத காலத்திற்கும் ஊதியம் வழங்க வேண்டும். கே.ஜி. டெனிம் நிறுவனத்தின் சட்டவிரோத ஆலை மூடல் விவகாரத்தில் தொழி லாளர் நலத்துறை உடனடியாக தலையிட வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த பேரவை கூட் டத்தில், சங்கத்தின் தலைவராக, சரவணகுமார், செயலாளராக, செல்வகுமார், பொருளாளராக சிவ ராஜ் உள்ளிட்ட 15 பேர் கொண்ட நிர் வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. இந்த பேரவை கூட்டத்தில், சிஐ டியு பஞ்சாலை சங்க பொதுச்செய லாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி, பஞ்சாலை சங்க நிர் வாகிகள் ஆனந்தன், ராம கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.எஸ்.கனகராஜ், மேட்டுப் பாளையம் தாலுகா செயலாளர் கே. கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.