tamilnadu

img

வட்டியுடன் நிலுவை ஊதியம் கேட்டு ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் மனு

வட்டியுடன் நிலுவை ஊதியம் கேட்டு 
ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் மனு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில்  பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த 12 வாரங்களாக ஊதி யம் வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள ஊதியத்தை வட்டியுடன் சேர்த்து வழங்கக்கோரி, பவானி ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்  சங்கத்தின் சார்பில் திங்களன்று மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் தலை மையில் நடைபெற்ற இந்த மனு அளிக்கும் போராட்டத்தில், சங்கத்தின் தலைவர் எஸ்.தம்பி, துணைத் தலைவர் எஸ். ஜானகி, தாலுகா துணைச் செயலாளர் சாரதி (எ) முனி யப்பன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத்  தலைவர் பி.பி.பழனிசாமி மற்றும் சன்னியாசிபட்டி, கவுந்தப் பாடி, சின்னபுலியூர், ஓடத்துறை, பெரியபுலியூர், மைலம்பாடி  உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மனுவில், 2024-25 நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்த தொழிலா ளர்களுக்கு கடந்த 12 வாரங்களாக கூலி வழங்கப்படாமல் நிலு வையில் உள்ளது. சட்டப்படி 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்படாத நிலையில், அதற்கு வட்டி சேர்த்து ஊதியம் வழங்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஊராட்சியிலும் 50  நாட்கள் வேலை செய்தவர்களுக்கு வேலை இல்லை என தெரி விக்கப்படுகிறது. சட்டப்படி ஒரு குடும்பத்திற்கு நூறு நாட்க ளுக்கான வேலையை உறுதிப்படுத்த வேண்டும். சட்டக் கூலி  ரூ.319 குறைக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.