ஒரு லட்சம் நிதி வழங்கிய விவசாயி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடை பெறுகிறது. இதனையொட்டி, மாநில அளவில் மட்டுமல்லாது, மாவட்டங்கள் அளவிலும் வர வேற்புக்குழு அமைக்கப் பட்டு, மாநாட்டுக்கான பணி கள் விரிவான முறையில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தேனி மாவட்டத்தில் 103 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப் பட்டு, கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே. பால பாரதி தலைமையில் நிதி வசூல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஞாயி றன்று பண்ணைபுரம் பேரூ ராட்சிப் பகுதிக்குச் சென்று மாநாட்டு ஏற்பாடுகளை கே. பாலபாரதி வழிநடத்தினார். அப்போது கட்சியின் ஆதர வாளர் அனந்தகிருஷ்ணன் இல்லத்திற்கு அவர் சென் றார்.
அவரை இன்முகத்து டன் வரவேற்ற அனந்த கிருஷ் ணன், கட்சியின் கடந்த கால வரலாறுகளை நினைவு கூர்ந்தார். “எனது தந்தை நடராஜன் கட்சியின் தீவிர ஆதரவாளர்; கட்சி தடை செய்யப்பட்ட காலத் தில், தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்ட தலைவர் களை வீட்டில் தங்க வைத்துப் பாதுகாத்தார். அவர்களில் மாபெரும் தலைவரான பி. ராமமூர்த்தியும் ஒருவரா வார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக் குழு கூட்டமும் எங்கள் வீட் டில் 3 நாட்கள் நடைபெற்றது. கூட்டம் நடந்தது யாருக்கும் தெரியாது. அவ்வளவு ரகசி யம். எனது தாயாருக்கே 3 நாட்கள் கழித்து- அதுவும் தலைவர்கள் வீட்டிலிருந்து வெளியேறிய போது தான் தெரியும். அவ்வளவு ரகசி யம்.
அதுபோல, கட்சியின் பொதுச் செயலாளராகவும் கேரள முதல்வராகவும் இரு ந்த இ.எம்.எஸ் நம்பூதிரிபாட், ஏ.கே. கோபாலன், டி.கே. ராமகிருஷ்ணன் போன்ற தலைவர்களும் எங்கள் இல் லத்திற்கு வந்து சென்றது இன்றும் பசுமையாக உள்ளது. ஏ.பாலசுப்பிரமணியம் நெருக் கமான தொடர்பு வைத்திருந் தார்” என்றும் அனந்த கிருஷ் ணன் அகமகிழ்ந்தார். அத்துடன், கட்சியின் அகில இந்திய மாநாடு மது ரையில் நடைபெறுவதை யொட்டி, தமது குடும்பத்தின் சார்பில் ரூ. 1 லட்சம் நன் கொடையையும், இன்முகத்து டன் கே. பாலபாரதியிடம் வழங்கினார். தேனி மாவட்டச் செய லாளர் எம். ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.எம். நாகராஜன், எஸ். வெண்மணி, தேவாரம் ஏரியா செயலாளர் டி. ராஜா, மாவட்டக்குழு உறுப்பினரும் பண்ணைப்புரம் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவரு மான எஸ். சுருளி வேல் ஆகி யோர் உடனிருந்தனர்.