tamilnadu

img

சிம்பொனியை இசைத்துத் திரும்பிய இளையராஜா

சிம்பொனியை இசைத்துத் திரும்பிய இளையராஜா

  இசைஞானி இளையராஜா, உலகின் மிகச் சிறந்த பில்ஹார் மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து, லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி சாதனை படைத்தார். அவரது சிம்பொனிக்கு இசை  ரசிகர்களிடையே, பெரும் வரவேற்  பும் பாராட்டும் குவிந்து வரும் நிலை யில், திங்கட்கிழமை அவர் சென்னை  திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில், தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு  சார்பில் அமைச்சர் தங்கம் தென்ன ரசு வரவேற்றார். “தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்திய நாட்டிற்கே பெருமை சேந் துள்ளார் இளையராஜா. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில்  அவரை வரவேற்க வந்திருக்கி றேன். மிகப் பெரிய உலக சாத னையை நிகழ்த்தி தாய் மண்ணிற்கு  பெருமை சேர்த்துள்ளார் இளைய ராஜா” என்று அவர் பாராட்டினார்.  

அதைத்தொடர்ந்து பேசிய இளையராஜா, “அரசு மரியாதை யுடன் முதல்வர் என்னை வரவேற்  றது மனம் நெகிழச் செய்தது” என்ற  இளையராஜா, “சிம்பொனியின் இரண்டாவது பிரிவில் எனது பாடல் களையும் வாசித்து, அதில் நானும்  பாடினேன். எனது சிம்பொனி இசை  துபாய், பாரிஸ் உள்ளிட்ட 13 நாடு களில் நடக்கவுள்ளது. ரசிகர்கள் என்னை இசைக் கடவுள் என அழைக்  கின்றனர். நான் சாதாரண மனி தன்தான். பண்ணைபுரத்தில் இருந்து இன்றுவரை எனது கால்  களில் நடந்து, எனது கால்களில் தான் நான் நிற்கிறேன். 82 வயது ஆகி விட்டதே என நினைக்க வேண்டாம்,  இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகி றேன். சிம்பொனி இசையை டவுன் லோடு செய்து கேட்க வேண்டாம். நேரில் வந்து கேளுங்கள்” என்றார்.