விவசாய நிலங்களை மாற்றுவதால் உணவுப் பற்றாக்குறை அபாயம்!
ள்ளக்குறிச்சி கருத்தரங்கில் பெ.சண்முகம் எச்சரிக்கை கள்ளக்குறிச்சி, மார்ச் 10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய 24-ஆவது மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஞாயிறன்று (மார்ச் 9) கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை யில் சிறப்புக் கருத்தரங்கம் நடை பெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், ‘விவ சாயிகளின் வாழ்வாதாரம்’ என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் உரையாற்றினார்.
நிலப் பயன்பாட்டுக் கொள்கை அவசியம்
அப்போது, அவர் பேசுகை யில், “விவசாயத் துறை யில் செயற்கை நுண்ண றிவு என்ற புதிய தொழில் நுட்பம் வந்துள்ளது. இதை யார் பயன்படுத்துவது என்ற போட்டி உலக நாடு கள் மத்தியில் நிலவுகிறது. அறிவியல் தொழில்நுட் பம் மேலும் மேலும் வளர வேண்டும், அது மனித குல முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்பது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நிலைப்பாடு” என்றார். “தொழில்நுட்பம் யாருடைய கையில் இருக்கிறது என்பது தான் பிரச்சனை. முதலா ளித்துவத்தின் கையில் இருந்தால், அதனை அவர்கள் கொள்ளை லாபத்திற்கு மட்டும் தான் பயன்படுத்துவார்களே தவிர, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சிந்தனை முதலாளிகளுக்கு இருக்காது,” என்று அவர் சுட்டிக் காட்டினார். விளைநிலம் குறைந்தால் உணவுப் பற்றாக்குறை “உலகில் எத்தனை புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் உணவை விவசாயத்தின் மூலம் தான் உற்பத்தி செய்ய முடியும் என்பது உண்மை நிலை. விவசாயி களின் வாழ்வாதாரம் என்பது உல கின் 800 கோடி மக்களுக்கும் உண வளிப்பது சம்பந்தமானது,” என் றார். “ஆனால் தமிழகத்தில் நல்ல விளைச்சல் தரும் விலை நிலங்க ளின் பரப்பளவு என்பது குறைந்து கொண்டே வருகிறது. பல்வேறு தேவைகளுக்காக நல்ல விவசாய நிலங்கள் வேறு பணிகளுக்கு மாற் றப்படுகின்றன. அது வீட்டுமனையாகவோ, கல்வி நிலையங்களாகவோ மற்றும் தங்க நாற்கரச் சாலையாகவோ, புதிய தொழிற்சாலைகளாகவோ, மருத்துவமனைகளாகவோ மாற்றப்படுகிறது. இதில் விவசாய விளை நிலங்களை மாற்றி அமைக்கும் நிலைமை இந்திய நாடு முழுவதும் இருக்கிறது. இதில் முன்னிலை மாநிலமாக தமிழகம் உள்ளது” என்று சண்முகம் வேதனை தெரிவித்தார். “
கடந்த 50 ஆண்டுகளில் 45 லட்சம் ஏக்கர் விலை நிலம் வேறு பணிகளுக்காக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. “ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலம் வேறு பணிக்கு மாற்றப்படும் நிலைமை நீடித்தால், உணவுப் பற்றாக்குறையில் தமிழகம் முதன்மையான இடத்தை பிடிக்கும்,” என்று சண்முகம் எச்சரித்தார். “புதிய தொழிற்சாலைகள், நகர விரிவாக்கங்கள் வேண்டும். ஆனால் அதற்கு நல்ல விளைநிலங்களை பயன்படுத்துவது சரியல்ல. மாறாக தமிழகத்தில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தரிசு நிலங்கள் 70 லட்சம் ஏக்கர் உள்ளது. இதில் தொழிற்சாலைகளை அமைக்க லாம்” என்று அவர் தெரிவித்தார். கேரளம் போல் “கேரளத்தில் ஆட்சி செய்யும் இடதுசாரி அரசாங்கம் நெல் விளையும் நிலத்தை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்ற தடைச் சட்டத்தை போட்டிருக்கிறது.
அது போன்று தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும்,” என்றார். “விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கேரள அரசு கொள்முதல் செய்து விநியோகம் செய்வது போன்று தமிழகத்திலும் நடை முறைப்படுத்த வேண்டும்,” என்று சண்முகம் கோரிக்கை வைத்தார். விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்ச னைகள் குறித்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்று வதற்கான மாநாடாக மதுரை மாநாடு அமைய உள்ளது,” என்றார். கருத்தரங்கில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், கட்சியின் மூத்த தலைவர் ஜி. ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் த. ஏழுமலை, பி. சுப்பிரமணி யன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.