tamilnadu

img

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் மனு

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் மனு

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பணிபுரி யும் ஊழியர்களுக்கு மாத ஊதியத்தை ரூ.10 ஆயிர மாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட ஆட் சியரிடம் ஊழியர்கள் மனு அளித்தனர். மக்களைத் தேடி மருத்துவத் திட்ட ஊழியர்கள்  சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் என்.ரேவதி  மற்றும் செயலாளர் கே.தனலட்சுமி ஆகியோர் தலை மையில் திரளான ஊழியர்கள் திங்களன்று மாவட்ட  ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், “இரண்டு மணி நேர வேலை என  பணியமர்த்தப்பட்டாலும், எட்டு மணி நேரத்திற்கும்  மேலாக வேலை வாங்கப்படுகிறது. பணி வரன் முறை செய்யப்பட வேண்டும். மாத ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஒவ் வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க  வேண்டும். கமிஷன் ஊழல் நடைமுறைகளைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன.