காவிரி ஆற்றங்கரையில் எச்சரிக்கை பேனர்
காவிரி ஆற் றங்கரையில் மது அருந்தவோ, அசுத்தப்படுத் துவதோ கூடாது என காவல் துறையினரால் எச் சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள் ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஈரோட்டை இணைக்கும் வகையில் காவிரி ஆறு செல்கிறது. இப்பகுதி யில் உள்ள மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக காவிரி ஆறு உள்ளது. இந்நிலையில் காவிரி கரையோரப் பகுதிகளில் மாலை நேரங்களில் அத்துமீறி நுழையும் சிலர் மது அருந்து வது, மது பாட்டில்களை ஆற்றில் உடைத்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற் றும் பெண்கள் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வெளி யூரிலிருந்து வரும் சில நபர்கள், குழுக்களாக வந்து மது அருந்தி செல்வதால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து, பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு காவிரி கரையோரப் பகுதிகளில் எச்ச ரிக்கை அறிவிப்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. காவிரி கரையோரப் பகுதிகளில் மது அருந்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள் ளது. மேலும், காவல் துறையினர் தொடர்ந்து ரோந்துப் பணி யில் ஈடுபட்டு, காவிரி கரையோரப் பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.