states

img

கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத் உறுதி

கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத் உறுதி

பாட்னா கேரள சட்டமன்றத் தேர்த லில் எல்டிஎப் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் என ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் (ஆர்ஜேடி), பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி பிரசாத் நம்பிக்கை தெரி வித்துள்ளார். கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணிக்கு (எல்டிஎப்) ஆதரவாக 3 நாள் பிரச்சாரம் மேற்கொண்ட பின்பு பாட்னாவில் செய்தியாளர்க ளிடம் தேஜஸ்வி மேலும் கூறுகை யில்,“கேரளத்தில் எல்டிஎப்க்கு மிகவும் சாதகமான சூழல் நிலவு கிறது. ஆளும் எல்டிஎப் கூட்டணியுட னான எங்களது உடன்பாட்டின் ஒரு  பகுதியாக, பல சட்டமன்ற தொகுதிக ளில் ஆர்ஜேடி கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. நாங்கள் சுமார் 8 முதல் 9 தொகுதிகளில் பிரச்சா ரம் செய்துள்ளோம்; ஆர்ஜேடி கட்சி  மூன்று தொகுதிகளில் போட்டியிடுகி றது. அங்கு நிலவும் சாதகமான அரசியல் சூழலையும், மக்களிடமி ருந்து கிடைக்கும் உற்சாகமான வரவேற்பையும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், இந்த முறை எல்டிஎப் அரசாங்கம் ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பதிவு செய்யும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.